
18th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது
- பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கரில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024–25 நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- பஞ்சாபின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் தவணையாக ரூ.225.1707 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுடைய அனைத்து 22 மாவட்ட பஞ்சாயத்துகள், 146 வட்டார பஞ்சாயத்துகள், 13144 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியங்கள், 2024–25-ம் நிதியாண்டிற்கு 2-வது தவணையாக ரூ.237.1393 கோடியும், 2024–25 நிதியாண்டின் 1-வது தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை ரூ.6.9714 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
- உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024–25-ம் நிதியாண்டின் முதலாவது தவணையாக ரூ.93.9643 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி தகுதியுள்ள 7,769 கிராம பஞ்சாயத்துகளுக்கும், தகுதியுடைய 995 வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் அளிக்கப்படும்.
- கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (பிப். 17) இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றாா்.
- பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கத்தாா் அரசா் இந்தியா வந்துள்ளாா். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
- குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
- இந்த சந்திப்பின்போது, இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திருத்தப்பட்ட இரட்டை வரிவிதிப்பு திருத்தம் மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகிய இரு ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டது.
- மேலும், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு ஆகிய 5 குறிப்புகளில் கையெழுத்தானது.
- இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வணிகமும் 280 கோடி டாலர் மதிப்பை எட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 26ஆவது தலைமை தேர்தல் ஆணையராக, ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழு கூடி ஞானேஸ்வர் குமார் பெயரை அறிவித்துள்ளது.
- நாளை முறைப்படி பதவியேற்க இருக்கும் ஞானேஷ்குமார், 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வினைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர்.
- ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான விவேக் ஜோஷி, கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் உள்ளார். முன்பு இவர், இந்திய அரசின் பணியாளர்கள் ஆணைய செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.