
17th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு
- ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும்.
- இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 1.39% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- பெட்ரோலியம் அல்லாத பிற ஏற்றுமதிகள் ஏப்ரல் -ஜனவரி 2023-24ல் 283.45பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது ஏப்ரல்-ஜனவரி 2024-25-ல் 305.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
- ஜனவரி 2025-ல் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அரிசி, ரத்தினங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது.
- மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.29 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 78.97% அதிகரித்து 2025 ஜனவரியில் 4.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
- பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 8.77 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.44% அதிகரித்து 2025 ஜனவரியில் 9.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
- மருந்துகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 21.46% அதிகரித்து 2025 ஜனவரியில் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
- அரிசி ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 0.95 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 44.61% அதிகரித்து 2025 ஜனவரியில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
- ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 15.95% அதிகரித்து 2025 ஜனவரியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
- 2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 9.72 சதவீத வளர்ச்சியாகும்
- மத்திய அரசின் ஆழ்கடல் இயக்கச் செயல்பாடுகளின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம், சமுத்திரயன் திட்டத்தின் ஒரு பகுதியாக "மத்ஸ்யா-6000" என்று பெயரிடப்பட்ட 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.
- இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் அதன் சிறிய 2.1 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ பகுதிக்குள் மூன்று பேரை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல் ஆய்வுத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
- இதற்கான வடிவமைப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்ஸ்யா-6000-ன் செயல்பாட்டிற்கு முக்கியமான பல்வேறு துணை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட்டன.
- துணை அமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தற்போது முழுமையான ஒருங்கிணைப்புக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.
- அதன் வெளிப்புற கட்டமைப்பில் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, 500 மீட்டர் செயல்பாட்டு வரம்பில் ஒருங்கிணைந்த உலர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தை (அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -PM-AASHA) அதாவது 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஒருங்கிணைந்த பிரதமரின் ஆஷா திட்டம், கொள்முதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக செயல்திறனை ஏற்படுத்தும்.
- இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசி வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
- உள்நாட்டு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தியில் 100% க்கு சமமான அளவில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
- ஜவுளி இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, மத்திய பட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ள சில்க்டெக்-2025 சர்வதேச மாநாட்டை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- சில்க்டெக் 2025 என்ற இந்த மாநாடு பாரத் டெக்ஸ் ஜவுளி கண்காட்சி நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்று வருகிறது. ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ், முன்னிலையில் இன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு தொடங்கியது.
- மத்திய பட்டு வாரியத்தின் கீழ் ராஞ்சியில் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனம் பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.
- பட்டுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நூல்களை இந்த மாநாட்டின் போது, ஜவுளி இணை அமைச்சர் வெளியிட்டார்.
- மாநாட்டின் போது, மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.