
14th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் - டிரம்ப் அறிவிப்பு
- வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிநவீன எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.