தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்புக்கான சட்டத் திருத்த மசோதா / TAMILNADU WOMENS SAFETY AMENDMENT BILL
TNPSCSHOUTERSJanuary 19, 2025
0
தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்புக்கான சட்டத் திருத்த மசோதா / TAMILNADU WOMENS SAFETY AMENDMENT BILL: தமிழக சட்டப்பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கச் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த திருத்த மசோதாவில் பாலியல் வழக்குகளில் சிக்கினால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்களை பின்தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை, பாலியல் குற்றங்களுக்கு பிணையில் விடுவிக்காத படி சிறை; குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
தண்டனை விவரங்கள்: டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது.
இதை, முதல் தண்டனை தீர்ப்பின்பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது.
தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.
கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.
இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும்.
ENGLISH
TAMILNADU WOMENS SAFETY AMENDMENT BILL: An amendment bill to increase the punishment for crimes against women and children has been introduced in the Tamil Nadu Legislative Assembly. Tamil Nadu Chief Minister M.K. Stalin introduced this amendment bill.
In this amendment bill, amendments have been made to make the laws stricter so that those caught in sexual cases cannot be released on bail. This bill has been passed unanimously in the Legislative Assembly.
For stalking women, imprisonment up to five years, non-bailable imprisonment for sexual crimes; for revealing the identity of the victims in certain crimes, imprisonment from three to five years; in cases of sexual assault, a sentence of rigorous imprisonment of not less than 14 years will be given.
Punishment details: For digital and electronic crimes, there is a 3-year imprisonment and a fine of Rs. 10 thousand. This will be extended to 5 years imprisonment and a fine of Rs. 1 lakh on the first conviction. In the case of second or consecutive convictions, a sentence of 10 years imprisonment and a fine of Rs. 10 lakh will be imposed.
Deaths caused by violence are punishable by 10 years of imprisonment and a fine of Rs. 50 thousand, and for violence committed with intent to cause death, life imprisonment and a fine of Rs. 50 thousand. At present, it will be punished by 15 years of imprisonment, a fine of Rs. 2 lakh and life imprisonment or death sentence and a fine of Rs. 2 lakh respectively.
Adequate electric lights and surveillance cameras should be installed in public places like educational institutions, hostels, cinema halls, and shopping malls. Information should be provided to police stations within 24 hours of the occurrence of crimes. The fine of Rs. 2 thousand imposed for concealing a crime without filing a complaint will be increased to Rs. 50 thousand.
Similarly, for violence, the punishment will be from 14 years of rigorous imprisonment to life imprisonment with fine. If a police officer, prison officer, government official, or hospital employee is guilty of violence, the punishment will be from 20 years of rigorous imprisonment to life imprisonment.
If a girl under 12 years of age is raped, the punishment is rigorous imprisonment or death penalty. If a gang rape is committed, the punishment is rigorous imprisonment for life with a fine.
If a girl under 18 years of age is raped, the punishment is rigorous imprisonment for life or death penalty. If the offenders commit repeated crimes, the punishment is death or rigorous imprisonment for life. If the identity of the victim is revealed, the punishment is imprisonment for 3 to 5 years with a fine.
If the woman is insulted or attacked with force, the punishment is imprisonment for 3 to 5 years with a fine. If the woman is followed, the punishment is imprisonment for up to 5 years with a fine.
If the same crime is repeated, the punishment is imprisonment for up to 7 years with a fine. If acid is thrown and causes grievous bodily harm, the punishment is rigorous imprisonment for life with a fine. If acid is threatened, the punishment is imprisonment for 10 years to life with a fine.