9th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பொங்கல் பரிசு தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரும்பு, வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
- இருப்பினும் பொங்கல் பரிசுடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
- இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது.
- இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்
- துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை கவர்னர் நியமித்தார். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில், அந்த உறுப்பினர் நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்பிரச்னை உள்ளது.
- இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி., தயாரித்து உள்ளது. யுஜிசி(பல்கலை, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி சார்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதி உயர்கல்வித் தரம் குறித்த நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025 என்ற தலைப்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
- அதில், "மூன்று நிபுணர்கள் கொண்ட தேடுதல் குழுவை பல்கலை வேந்தர் நியமிக்க வேண்டும். (தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தேடுதல் குழுவில் 3-5 பேர் இருப்பார்கள். அவர்கள் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்ற வரையறை கிடையாது).
- துணைவேந்தர் நியமனத்திற்கு என அகில இந்திய அளவில் நாளிதழ்களில் விளம்பரம் மற்றும் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
- தேடுதல் குழுவில், வேந்தர் நியமிக்கும் பிரதிநிதி தலைவராக இருப்பார். யு.ஜி.சி தலைவரின் பிரதிநிதி, பல்கலை சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார்கள். (பல மாநிலங்களில் கவர்னரின் பிரதிநிதியை மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். பல மாநிலங்களில் இந்த நடைமுறையை மாற்றி கவர்னரே நியமித்தார்).
- இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி.,யின் திட்டங்களில் பங்கேற்க முடியாது. பட்டங்களை வழங்க முடியாது" என்று கூறப்பட்டு இருத்தது. மேலும், இது குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
- இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
- இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர்.
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- 18வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு ஒடிசா மாநில அரசுடன் இணைந்து 2025 ஜனவரி 8 முதல் 10 வரை புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு’ என்பதாகும். இந்த மாநாட்டில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பதிவு செய்திருந்தனர்.
- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சிறப்பு சுற்றுலா ரயிலான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸின் தொடக்க பயணத்தை பிரதமர் தொலை உணர்வு கருவிக் வாயிலாக தொடங்கி வைத்தார்.