![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMMSS9A_VSig1bbo2O4iuWqI7Px9GvNjVbxDQZMtJBEoQL9L5JJBZONHh6Cx8TE4aeVJ3OKy5Msto1NixuA4agEj89mSt5NJe1KBId6pkykDpqGmxBOAdTaJzOYB0jEyBrc9YI2N8j9r8/s640/ca+cov.jpg)
7th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி
- கொரோனா முடிந்த பிறகு இந்தியா பொருளாதாரம் சிறப்பாகவே வளர்ச்சி அடைந்து வந்தது. இதற்கிடையே இப்போது 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளைத் தேசிய புள்ளியல் அலுவலகம் கணித்துள்ளது.
- அதில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஜிடிபி 2024-25 நிதியாண்டில் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
- 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 8.2%ஆக இருந்த சூழலில், 2024-25 நிதியாண்டில் அது 6.4% குறையும் என்று தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மிதமான வேகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, தில்லி மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமனம் செய்துள்ளார்.
- அதன்படி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் அஜய் திக்பால், ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோரும், உத்தராகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி ஆஷிஷ் நைதானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.