6th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பக்கோட்டை அகழாய்வு - கலைநயமிக்க அணிகலன்கள் கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம், மேட்டுகாடு பகுதியில் 3ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
- அகழாய்வில் இதுவரை சூது பவள மணிகள், தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு, வளையல்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சங்கு வளையல், பெண்கள் அணிகலனாக பயன்படுத்திய படிகக்கல் மணி, சில்லுவட்டு ஆகியவை
- கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் கலைநயமிக்க அணிகலன்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
- கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
- புதிய ஜம்மு ரயில்வே கோட்டப் பிரிவை பிரதமர் தொடங்கி வைத்தார். தெலுங்கானாவின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி புதிய முனைய நிலையம் சுமார் 413 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய பயிற்சி முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
- பூமியிலிருந்து சுமார் 430 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், சிம்ம ராசி விண்மீன் கூட்டத்தில், என்ஜிசி 3785 பால்வெளியில் விண்மீன் திரள்களுக்கு விண்மீன்களுக்கு இடையேயான வாயுக்களின் நீண்ட, மெல்லிய நீரோட்டமான அலை வால் முடிவில் ஒரு புதிய வகை பால்வெளி உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- என்ஜிசி 3785 பால்வெளி மற்றும் அதன் அண்டை பால்வெளி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையால் புதிய பால்வெளி உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
- பால்வெளியின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். என்ஜிசி 3785 விண்மீன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால்வெளிகளில் மிக நீண்ட அலை வால் கொண்டதாக அறியப்படுகிறது.
- பால்வெளியில் இருந்து வால் பகுதி விரிவடைந்து உள்ளது. இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக வரும்போது ஈர்ப்பு விசைகளால் ("அலை ஆற்றல்கள்") இந்த வகை வால் பகுதி உருவாகிறது.
- இரண்டு பால்வெளிகள் நெருக்கமாக தொடர்பு கொள்ளும்போது, ஒவ்வொன்றில் இருந்தும் பொருட்கள் இழுக்கப்படும் போது இவ்வாறான வால் பகுதி உருவாகிறது.
- அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை என்ஜிசி 3785 விண்மீன் மண்டலம் ஈர்த்துள்ளது.
- இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிக நீண்ட அலைவால் கொண்ட விண்மீனாக மட்டுமின்றி அந்த வால் பகுதியின் முடிவில் தற்போது ஒரு புதிய பால்வெளி உருவாகி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.