3rd JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- ஜே.ஜே தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த பிரதமர், தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார்.
- நவ்ரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு குடியிருப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.