
30th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக 'அனைவருக்கும் வீடு' என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும்.
- பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.
- வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை. கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.
- இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1625.30 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.1350.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.249.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.1600.85 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.500 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.
- தற்போது வரப்பெற்றுள்ள ரூ.500 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2125.30 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
- இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு தகவலியல் மற்றும் புத்தாக்கப் பிரிவுக்கும் இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கழகத்துக்கும் (ஐஐஐடி-தில்லி) இடையே தரவு கண்டுபிடிப்பு ஆய்வக முன்முயற்சியின் கீழ் 30.01.2025 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- கடந்த ஓராண்டில் தேசிய புள்ளியியல் முறையை நவீனப்படுத்த அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைச்சகம் புதுமைகளை புகுத்துவதற்கும், ஆராய்ச்சி சார்ந்த தீர்வுகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் தரவு கண்டுபிடிப்பு ஆய்வக முன்முயற்சிக்கான திட்டத்தைத் தொடங்கியது.
- தரவு சேகரிப்பு, செயலாக்கம் மற்றும் பரவலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் பேரளவு தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான தளமாக ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வெளியிடத் தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆய்வகம் முதன்மையான கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அணுகப்பட்டுள்ளன. ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இந்த கூட்டாண்மையின் முக்கிய நோக்கம், கல்வியாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் உலக சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வி நிபுணத்துவத்தை மேம்படுத்துவதாகும்.
- அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்கான இந்த கூட்டு முயற்சி மற்றும் கூட்டு அணுகுமுறையில், அமைச்சகம் மற்றும் ஐஐஐடி இடையேயான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாண்மை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
- ஐஐடி தில்லியுடனான ஒத்துழைப்பு என்பது கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம், அரசுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் அமைப்பில் புதிய யோசனைகளை புகுத்துவது என்ற தனது உறுதிப்பாட்டை மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது.
- இது அமைச்சகத்தின் செயல்பாட்டைக் கணிசமாக மேம்படுத்துவதுடன் நாட்டின் புள்ளியியல் சூழலை வலுப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீச்சலில் ஆடவா் 100 மீ. பட்டா்பிளை பிரிவில் தமிழக வீரா் ரோஹித் பெனடிக்டன் தங்கம் வென்றாா். இது தேசிய போட்டிகளில் முதல் தங்கப் பதக்கமாக அமைந்தது.
- அதே போல் 4-00 மீ ப்ரிஸ்டைல் ஆடவா் பிரிவில் தமிழக அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. மகளிா் 4-100 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் தமிழகம் வெண்கலம் வென்றது. அதே போல் கலப்பு அணிகள் ட்ரையத்லான் பிரிவிலும் வெண்கலம் வென்றது.