
29th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இஸ்ரோவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
- ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்த ராக்கெட் (GSLV F-15) மூலம் என்.வி.எஸ். - 02 (NVS - 2) வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.
- சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட் ஏவப்பட்டது.
- இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் நடந்த முதல் ராக்கெட் ஏவுதல் இதுவாகும்.
- இந்த மையத்திதிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டால், அவை வினாடிக்கு 0.4 கி.மீ கூடுதல் வேகத்துடன் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 1440 கி.மீ கூடுதல் வேகத்தை ராக்கெட்டிற்கு அளிக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் பூமியின் சுழற்சி அமைந்துள்ளது.
- இந்த விண்வெளி ஆய்வு மையம் போல் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம் பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன.
- இந்த செயற்கை கோள் இந்தியாவின் தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும்.
- இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பயந்தது என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அதோடு விண்வெளி வழிசெலுத்தலில் இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் "முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை"த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 76வது குடியரசு தின அணிவகுப்பு 2025-ல் மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்திக்கான விருது பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த ஆண்டை நினைவுகூரும் வகையில், "பழங்குடியினர் கௌரவ ஆண்டு" அடிப்படையிலான எழுச்சியூட்டும், கலாச்சார ரீதியான பிரம்மாண்ட ஊர்திக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- வலிமை, நிலைத்தன்மை மற்றும் பழங்குடி சமூகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான தொடர்பைக் குறிக்கும் கம்பீரமான சால் மரத்துடன் பழங்குடி நெறிமுறைகளை இந்த அலங்கார ஊர்தி அழகாக சித்தரித்திருந்தது.
- "நீர், வனம், நிலம்" என்ற மையப்பொருள், இந்தியப் பழங்குடி பாரம்பரியத்தின் தொன்மையான ஞானத்தையும், சுதந்திரப் போராட்டம், தேசத்தைக் கட்டமைப்பது ஆகியவற்றில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் வெளிப்படுத்தியது.