
25th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காதணி கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,210-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுடுமண்ணால் ஆன பெண்கள் அணியும் காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- உலகின் 31 ஈரநில அங்கீகாரம் பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தூர் மற்றும் உதய்பூர் இணைந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், சிக்கந்தர் ராஸா, டிராவிஸ் ஹெட் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது.
- கடந்த ஆண்டில் மட்டும் 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
- அதிலும், குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். மற்ற வீரர்கள் இந்த சாதனையைப் படைக்க அதிக போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.