Type Here to Get Search Results !

23rd JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • 'இரும்பின் தொன்மை' நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தலுக்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் நடைபெற்றது.
  • இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  • இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 5914 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ. 17.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியம் மற்றும் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 22.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் ஆகியவைகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
  • மேலும் 'இரும்பின் தொன்மை' என்ற நூலை வெளியிட்ட முதலமைச்சர், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எனும் இணையதளத்தை தொடங்கி வைத்தார். 
  • இந்த இணையதளத்தின் மூலம் கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளலாம். மேலும், பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே 360 டிகிரியில் அருகாட்சியத்தை சுற்றிப்பார்பதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது.
சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வு முடிவில் அறிவிப்பு
  • சிவகளையில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் வாள்கள், கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள் மற்றும் கோடாரிகள் என 85-க்கும் மேற்பட்ட இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 
  • இவற்றின் காலத்தை கண்டறிய முதற்கட்ட கார்பன் ஆய்வுக்கு உட்படுத்திய போது, சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் கிமு 3ஆயிரத்து 345 என்பது தெரியவந்தது.
  • இதை உறுதி செய்வதற்காகவும், மேலும் தெளிவான கணக்கீடுகளைப் பெறுவதற்காகவும், லக்னோ மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
  • மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்திற்கும் இரும்பு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த 3 ஆய்வகங்களிலும் கிடைத்த முடிவுகள் பெரிய அளவில் வித்தியாசமின்றி இருந்தது முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.
  • இரண்டாம் கட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில், சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 3 ஆயிரத்து 345 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டது. 
  • இதன் அடிப்படையில் இறுதி கணக்கீட்டின் படி, சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தேசிய சுகாதார இயக்கத்தின் சாதனைகள் விவரிக்கப்பட்டன.
  • பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ‘கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கம் முன்னெப்பதும் இல்லாத இலக்குகளை எட்டியுள்ளது. 
  • இந்த இயக்கத்தின்கீழ் கடந்த 2021-22 காலகட்டத்தில் சுமாா் 12 லட்சம் சுகாதார பணியாளா்கள் பணியில் இணைந்தனா். இந்த இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது’ என்றாா்.
  • கடந்த 2013-இல் தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து தேசிய சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel