சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) வரைவு விதிகள் 2025 / LEGAL WEIGHTS (INDIAN STANDARD TIME) DRAFT RULES 2025
TNPSCSHOUTERSJanuary 27, 2025
0
சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) வரைவு விதிகள் 2025 / LEGAL WEIGHTS (INDIAN STANDARD TIME) DRAFT RULES 2025: 'ஒரே நாடு, ஒரே நேரம்' என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐந்து எடையளவு தொடர்பான சட்டமுறை ஆய்வகங்களிலிருந்து நேரத்தை கணக்கிடும் முறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வழிகாட்டுதல் செயலி, தொலைத்தொடர்பு, மின் விநியோகம், வங்கி, டிஜிட்டல் நிர்வாகம், விண்வெளி வழிகாட்டுதல், ஈர்ப்பு அலை கண்டறிதல் உள்ளிட்ட அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளுக்கு இந்த கால அளவீடு முறையின் துல்லியமான கணக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அனைத்து தொலைத்தொடர்பு சேவை, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய நிலையான நேரம் தொடர்பான கணக்கீடுகளை ஏற்றுகொள்வதில்லை. இந்நிறுவனங்கள் ஜி.பி.எஸ் போன்ற வெளிநாட்டு நேர ஆதாரங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
அனைத்து வலைத்தள சேவைகள், கட்டமைப்புகள் ஆகியவை இந்திய நிலையான நேரத்துடன் இணைந்து தேசிய பாதுகாப்பு, நிகழ்நேர பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.
பல்வேறு சவால்களை எதிர்கொள்ள, சட்டமுறை எடையளவு சட்டம், 2009-ன் கீழ் கொள்கை வடிவமைப்பு, ஒழுங்குமுறை, சட்ட விதிகள் ஆகியவற்றை உருவாக்க அமைச்சகங்களுக்கு இடையிலான உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான இக்குழுவில் தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தகவல் மையம், இந்தியக் கணினி அவசரகால மீட்புக்குழு, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ரயில்வே, தொலைத்தொடர்பு, மற்றும் நிதி சேவைகள் போன்ற மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.
சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள்-2025-ன் வரைவு விதிகள், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சட்டமுறை எடையளவு பிரிவால் நாடு முழுவதும் இந்திய நிலையான நேரத்தை (IST) பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தும் ஒரு விதியாக வெளியிடப்படுகிறது.
ENGLISH
LEGAL WEIGHTS (INDIAN STANDARD TIME) DRAFT RULES 2025: With the aim of 'One Nation, One Time', the Consumer Affairs Department of the Union Government has undertaken a project to accurately calculate Indian Standard Time in collaboration with the National Physical Laboratory and the Indian Space Research Organization to ensure accurate time throughout the country.
The project aims to create an infrastructure for calculating time from five weight-related legal laboratories across the country.
Accurate calculation of this time measurement system is important for sectors such as guidance applications, telecommunications, power distribution, banking, digital governance, space navigation, gravitational wave detection and other cutting-edge scientific research. Not all telecom service providers and Internet service providers accept calculations related to Indian Standard Time.
These companies rely only on external time sources such as GPS. All web services and infrastructures will work with Indian Standard Time to ensure national security, real-time applications and smooth functioning of critical infrastructure.
To address various challenges, an Inter-Ministerial High-Powered Committee has been constituted to formulate policy, regulations and rules under the Legal Weights Act, 2009.
The Committee, headed by the Secretary, Department of Consumer Affairs, includes representatives from key departments of the Central Government such as the National Physical Laboratory, Indian Space Research Organisation, Indian Institute of Technology Kanpur, National Informatics Centre, Indian Computer Emergency Response Team, Stock Exchange of India, Railways, Telecom and Financial Services.
The draft rules of the Legal Weights (Indian Standard Time) Rules-2025 are being published by the Legal Weights Division of the Department of Consumer Affairs as a rule to make the use of Indian Standard Time (IST) mandatory across the country.