Type Here to Get Search Results !

ஐசிசி வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அணி பட்டியல் / ICC BEST ODI & TEST XI 2024

ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விவரம்

  • ஐசிசி வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அணி பட்டியல் / ICC BEST ODI & TEST XI 2024: ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
  • இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு பேரும், நியூசிலாந்து அணியிலிருந்து இருவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.
  • பாட் கம்மின்ஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, மாட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

2024 ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணி

  • ஐசிசி வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த அணி பட்டியல் / ICC BEST ODI & TEST XI 2024: ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போதும் கடந்த ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான 11 பேர் கொண்ட சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியை இன்று ஐசிசி வெளியிட்டது.
  • இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை. கடந்த ஆண்டு இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 
  • இலங்கைக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.
  • கடைசி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டுக்கான சிறந்த அணியில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. 
  • ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த அணியில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தாலிருந்து தலா 3 வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டிசை சேர்ந்த ஒருவர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
  • சரித் அசலங்கா (கேப்டன்) (இலங்கை), சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), பதும் நிசாங்கா (இலங்கை), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) (இலங்கை), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கு இந்தியத் தீவுகள்), அஸ்மத்துல்லா உமர்சாய் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்), ஏ.எம்.கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்).

ENGLISH

ICC Test Team of the Year 2024

  • ICC BEST ODI & TEST XI 2024: The Test team released by the ICC features three players: Indian fast bowler Jasprit Bumrah, Yashasvi Jaiswal and Ravindra Jadeja.
  • Four players from the England team and two from the New Zealand team are included in this team. Australian player Pat Cummins is the captain of the team. He is the only one from the Australian team to be included in the team.
  • Pat Cummins (captain), Yashasvi Jaiswal, Ben Duckett, Kane Williamson, Joe Root, Harry Brook, Kamindu Mendis, Jamie Smith, Ravindra Jadeja, Matt Henry and Jasprit Bumrah.

ODI Team of the Year 2024

  • ICC BEST ODI & TEST XI 2024: At the beginning of each year, the International Cricket Council (ICC) releases the best 11-man ODI team of the previous year. In that regard, the ICC today released the best team for 2024.
  • No Indian players are in this list. Last year, the Indian team played only 3 one-day matches. In this cricket series held in that country against Sri Lanka, the Indian team lost the first 2 matches and lost the series.
  • The last match ended in a draw. Due to this, it is said that no Indian players were included in the best team for last year. The best team for one-day matches released by the ICC has 4 players from Sri Lanka, 3 players each from Pakistan and Afghanistan and one from the West Indies.
  • Charith Asalanga (captain) (Sri Lanka), Saim Ayub (Pakistan), Rahmanullah Gurfaz (Afghanistan), Badum Nissanka (Sri Lanka), Kusal Mendis (wicketkeeper) (Sri Lanka), Sherfan Rutherford (West Indies), Asmatullah Umarzai (Afghanistan), Wanindu Hasaranga (Sri Lanka), Shaheen Shah Afridi (Pakistan), Harris Rauf (Pakistan), A.M. Khazanfar (Afghanistan).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel