1st JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி
- டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,76,857 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.
- கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை (1.65 லட்சம் கோடி ரூபாய்) ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
- டிசம்பரில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து ரூ. 44,268 கோடியாகவும் உள்ளது. இந்த மாதத்தில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.22,490 கோடியாகும்.
- இதுவே கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சமாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக கடைப்பிடிப்பது என்ற தீர்மானம் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அந்த வகையில், பாதுகாப்புப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதிலும் பல்முனை ஒருங்கிணைந்த செயல் திட்டங்களுக்கு ஆயத்தமாக இருக்கச் செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- 2025-ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் இணையவழி(சைபர்), விண்வெளி, செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த இயந்திர ஆய்வுகள்(மெஷின் லேர்னிங்) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், ஹைப்பர்சோனிக், ரோபோடிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டை அமைப்பதே இந்த கருத்தின் குறிக்கோளாகும்.
- ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- இதற்கு முன்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவி அஸ்வின் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார். தற்போது, பும்ரா அதை பின்னுக்குதள்ளி சாதனை படைத்துள்ளார்.
- இதன்மூலம் உலக அளவில் இதுவரை ஒரு பந்துவீச்சாளர் பெற்ற அதிகபட்ச டெஸ்ட் தரவரிசையில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் டேரக் அண்டர்வுட் உடன் சமன்செய்துள்ளார்.
- விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
- பி&கே உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலனை உறுதியாக வைத்திருப்பதில் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை மாற்றாமல் வைத்திருப்பதில் மத்திய அரசு விவசாயிகளுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது.
- புவிசார் அரசியல் தடைகள் மற்றும் உலகளாவிய சந்தை நிலைமைகளின் நிலையற்ற தன்மை இருந்தபோதும், 2024-25 கரீஃப் மற்றும் ரபி பருவங்களுக்கு மலிவு விலையில் விவசாயிகளுக்கு டிஏபி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உகந்த அணுகுமுறையை அரசு கடைப்பிடித்தது.
- 01.04.2024 முதல் 31.12.2024 வரை தோராயமாக ரூ.2,625 கோடி செலவினத்துடன் என்.பி.எஸ் மானியம் ரூ.3,500 க்கு அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்புக்கு அமைச்சரவை 2024 ஜூலையில் ஒப்புதல் அளித்திருந்தது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரை 69,515.71 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.
- இது தவிர, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் பெரும் அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளதோடு ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
- யெஸ்-டெக், விண்ட்ஸ் போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குமா நிதியளிக்க இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
- தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீடுகளுக்கு குறைந்தபட்சம் 30% முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
- 9 பெரிய மாநிலங்கள் அதாவது ஆந்திரா, அசாம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை இந்த தொழில்நுட்பத்தைத் தற்போது செயல்படுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேசம் 100% தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.
- வட்டார அளவில் தானியங்கி வானிலை மையங்களையும், ஊராட்சி அளவில் தானியங்கி மழைமானி நிலையங்களையும் அமைக்க வானிலை தகவல் மற்றும் வலைப்பின்னல் தரவு அமைப்புகள் (விண்ட்ஸ்) திட்டமிட்டுள்ளன.
- விண்ட்ஸ் திட்டத்தின் கீழ், தற்போதைய நெட்வொர்க் எண்ணிக்கையில் 5 மடங்கு அதிகரிப்புடன் ஹைப்பர் லோக்கல் வானிலை தரவு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- கேரளா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, அசாம், ஒடிசா, கர்நாடகா, உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 9 பெரிய மாநிலங்கள் 'விண்ட்ஸ்' திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டங்களின்கீழ் அதிகபட்ச பலன்களை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இதற்காக பிரீமியம் மானியத்தில் 90 சதவீதத்தை வடகிழக்கு மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இத்திட்டம் தன்னார்வத் திட்டம் என்பதாலும், வடகிழக்கு மாநிலங்களில் மொத்த பயிரிடப்படும் பரப்பு குறைவு என்பதாலும், நிதி ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கவும், நிதி தேவைப்படும் பிற வளர்ச்சித் திட்டங்களில் மறு ஒதுக்கீடு செய்யவும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.