
17th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- பாரத மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எச்.டி. குமாரசாமி, ஜிதன் ராம் மஞ்ஜி, மனோகர் லால், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
- ஜனவரி 17 - 22ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் முதல் வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், டையர்கள், எரிபொருள் சேமிப்புத் திறன் உற்பத்தி, ஆட்டோமோட்டிவ் மென்பொருள் நிறுவனங்கள், உதிரிபாகங்கள் மறுசுழற்சி என அனைத்தும் ஒரே குடையின் கீழ் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
- ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
- பாரத மண்டபம், தலைநகரில் உள்ள யசோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா வர்த்தக மையம் என மூன்று இடங்களில் இந்த கண்காட்சி நடைபெறவிருக்கிறது.
- அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
- இந்நிலையில் தற்போதுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாகமானது இந்தியாவின் 3 நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
- இது தொடர்பாக தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''பனிப்போர் காலத்தின்போது இந்தியாவை சேர்ந்த இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், இன்டியன் ரேர் எர்த்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இதுபோன்று மேம்பட்ட எரிசக்தி ஒத்துழைப்புக்கான தடைகளை குறைப்பது அமெரிக்க வெளியுறவு கொள்கையின் நோக்கத்துக்கு ஆதரவாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதே நேரத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணான செயல்களுக்காக சீன நாட்டை சேர்ந்த 11 நிறுவனங்கள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.