
16th JANUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்
- காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது.
- அதன்படி, வரும் 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
- இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வந்தது. ஏராளமான உயிர்கள் பலிக் கொடுக்கப்பட்டதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன.
- பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த வேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்தம் குறித்து இறுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
- இஸ்ரேலிடம் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதால், 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது.
- பாதுகாப்பு அமைச்சகம் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இணைந்து இந்திய கடற்படைக்கு சுமார் ரூ. 2,960 கோடி செலவில் நடுத்தர தூர மேற்பரப்பு-விமான ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தம் இன்று ஜனவரி 16 வியாழக்கிழமை புதுடெல்லியில் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
- இத்திட்டத்தின் மூலம் பல இந்திய கடற்படை கப்பல்களில் ஏவுகணைகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை சுதேசிமயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
- விண்வெளியில் தனித்தனியாக பறக்கும் இரண்டு வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியே டாக்கிங் எனப்படும். இந்த டாக்கிங் பணி என்பது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு பணியாகும். இத்தகைய பணியை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் செய்துள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக, இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய திட்டம்தான் Spadex Docking Mission. அதன்படி, 2024 டிசம்பர் 30ம் தேதி, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம், SDX01(Chaser), SDX02(Target) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
- இந்த டாக்கிங் பணி ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடைபெற இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் அந்த பணி நிறுத்தப்பட்டது.
- இரண்டு செயற்கைக்கோள்களும் 3 மீட்டர் இடைவெளியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் பின்னோக்கி பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டன.
- இந்த நிலையில், இன்று(16.01.24) டாக்கிங் பணியை வெற்றிகரமாக இஸ்ரோ முடித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2 செய்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று தருணம் எனவும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது..
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும்.
- இது எதிர்கால இந்திய மனித விண்வெளிப் பயணங்களுக்கான செலுத்துதல் திறனையும் மேம்படுத்தும். இந்த திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.
- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை மாற்றியமைக்க 8 வது ஊதியக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
- ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக பலன் கிடைக்கும்.