26th DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சிகை அலங்கார மனித தலை கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை-விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.
- மேலும், சூதுபவள மணிகள், மாவுக் கற்களால் செய்யப்பட்ட உருண்டை-நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல்மணிகள் கிடைத்துள்ளன.
- மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது. இவைகள் பண்டைய தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது.
- முதன் முதலில் வழுக்கை கழுகு (Bald Eagle) வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதியில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த கழுகு அமெரிக்காவில் சக்தி மற்றும் வலிமையின் அடையாளமாக கருதப்படுகிறது.
- அமெரிக்க வரலாற்றுடன் வழுக்கை கழுகுகளுக்கு 240 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு உள்ளது. இதையடுத்து, வழுக்கை கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டுமென நீண்ட காலங்களாக கோரிக்கை எழுந்து வந்தது.
- இந்நிலையில் வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் வழுக்கை கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா இலங்கை இடையே இருதரப்பு கடற்படை பயிற்சி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது.
- கிழக்கு கடற்படை தலைமையின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் இந்தியா சார்பில் கிழக்கு கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலும் இலங்கை கடற்படையின் சார்ஜ், சயுரா போர்க்கப்பல்களும் பங்கேற்றன.
- இந்தக் கூட்டுக் கடற்பயிற்சியின் தொடக்க விழா 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், தொழில்முறை, சமூகப் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- இரு நாட்டு கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிகளில் தகவல் தொடர்பு நடைமுறைகள், கடல்சார் ஒத்திகைகள், ஹெலிகாப்டர் பயன்பாடு போன்ற பல்வேறு பயிற்சிகள் உள்ளடங்கி இருந்தன.
- 2005-ம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் கூட்டுக் கடற்படை பயிற்சி இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் கடல்சார் விதிமுறைகளை உருவாக்கவும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது.