23rd DECEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
- மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார்.
- அந்த வகையில், இன்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, காணொலி காட்சி வாயிலாக பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
- குவைத்தைச் சேர்ந்த அப்துல்லா அல் பரோன் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிப்பெயர்ந்திருந்தார். அந்த மொழிப்பெயர்ப்பை அந்த நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர் அப்துல் லத்தீப் அல் நெசப் வெளியிட்டிருந்தார்.
- இந்த நூல்கள் குறித்து சமீபத்தில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மோடி பகிர்ந்திருந்தார். தற்போது, குவைத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி, அப்துல்லா அல் பரோன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் ஆகிய இருவரையும் சந்தித்தார்.
- அப்துல்லா அல் பரோன் மற்றும் அப்துல் லத்தீப் அல் நெசப் இதுவரை உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட புத்தகம் மற்றும் புனித நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.
- மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி என்ற கொள்கையை ரத்து செய்துள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
- அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள். அதே வகுப்புகளில் மாணவர்கள் தக்கவைக்கப்படுவார்கள்.
- குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் குழந்தை வெளியேற்றப்படக் கூடாது.
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹிமாசலப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் ராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார். முன்னதாக சென்னை மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
- தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன், இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்; சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1983-ல் பட்டம் பெற்றவர்.
- 2006 முதல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2009 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
- 2016 முதல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், 2019 ஜூன் முதல் ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இருந்துள்ளார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர்.