2018 -2022ல் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்து குறித்த அறிக்கை / REPORT ON ROAD ACCIDENTS IN INDIA FROM 2018 -2022
TNPSCSHOUTERSDecember 14, 2024
0
2018 - 2022ல் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்து குறித்த அறிக்கை / REPORT ON ROAD ACCIDENTS IN INDIA FROM 2018 - 2022: சாலை விபத்துகள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெற்ற விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி 2018 -2022ல் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்தில் 7.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில், உ.பி.,யில் 22,595 பேரும், மஹாராஷ்டிராவில் 15,224 பேரும், தமிழகத்தில் 17,884 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மொபைல் போன் பயன்படுத்துல், மதுபோதையில் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறி வாகனம் இயக்கியது ஆகியவை சாலை விபத்துக்கான முக்கிய காரணியாக உள்ளது.
விபத்துகளை குறைக்க, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து மீறல்களை கட்டுப்படுத்த அபராதத்தை உயர்த்தும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திருத்தியது.
2020ம் ஆண்டில் மட்டும் ரூ.36,700 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு மட்டும் 1,68,491 உயிர் இழந்துள்ளனர்.
முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்கள்
உ.பி - 1,08,882 உயிரிழப்பு
தமிழகம் - 84,316 உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 66,370 உயிரிழப்பு
ம.பி - 58,580 உயிரிழப்பு
கர்நாடகா - 53,448 உயிரிழப்பு
ராஜஸ்தான் - 51,280 உயிரிழப்பு
ஆந்திரா - 39,058 உயிரிழப்பு
பீஹார் - 36,191 உயிரிழப்பு
தெலுங்கானா - 35,565 உயிரிழப்பு
குஜராத் - 36,626 உயிரிழப்பு
ENGLISH
REPORT ON ROAD ACCIDENTS IN INDIA FROM 2018 - 2022: The Union Ministry of Road Transport and Highways has released the data received from the state governments and union territory governments on road accidents.
Accordingly, 7.77 lakh people died in road accidents across the country from 2018 to 2022. This year, 22,595 people died in UP, 15,224 in Maharashtra, and 17,884 in Tamil Nadu.
Speeding, using mobile phones, driving under the influence of alcohol, and violating traffic rules are the main factors behind road accidents. The Ministry of Road Transport and Highways is taking steps to reduce accidents.
The central government amended the Motor Vehicles Act to create awareness about accidents and increase fines to control traffic violations. In 2020 alone, Rs. 36,700 crore was collected as fines. In 2022 alone, 1,68,491 lives were lost.