தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது / UN AWARD FOR TAMILNADU MAKKALAI THEDI MARUTHUVAM THITTAM
TNPSCSHOUTERSNovember 11, 2024
0
தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருது / UN AWARD FOR TAMILNADU MAKKALAI THEDI MARUTHUVAM THITTAM: மக்களைத் தேடி மருத்துவம் எனும் உன்னதமான திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இதயம் பாதுகாப்போம் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், பாதம் பாதுகாக்கும் திட்டம், சிறுநீரகம் விழித்திரை பாதிப்புகளை சீர் செய்யும் மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதியன்று நியூயார்க்கில் நடந்த 79-வது ஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் நடைபெற்ற விழாவில், 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்திய அளவில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
UN AWARD FOR TAMILNADU MAKKALAI THEDI MARUTHUVAM THITTAM: Makkalai Thedi Maruthuvam was inaugurated by Chief Minister M.K. Stalin on 5.8.2021 in Krishnagiri district. As a continuation of this program, Heart Protection Program, Kidney Protection Serum Program, Medical, community-based cancer screening program in search of workers, The programs such as Walk and get well, project to protect feet, and medicine to repair kidney and retina damage are being implemented.
In this case, the Task Force Awards for 2024 were announced at the Eleventh Friends of the Task Force meeting of the 79th UN General Assembly in New York on September 25.
In it, the award has been announced and given to the Tamil Nadu Government's Makkalai Thedi Maruthuvam Program under the category of Health Ministries or Government Institutions under the Ministry of Health.
Also, at a ceremony held in Delhi, Tamil Nadu was selected as the second state in India in the process of State Food Safety Index for the year 2023-24. It is noteworthy that the Food Safety Department of Tamil Nadu has consistently retained the top three positions in the process of State Food Safety Index in India for the last three years.