30th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய இராணுவம் - சிங்கப்பூர் ஆயுதப் படை இடையேயான "அக்னி வாரியர் - 2024" கூட்டு இராணுவப் பயிற்சி
- இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியான அக்னி வாரியர் (XAW-2024) - ன் 13-வது பதிப்பு, மஹாராஷ்ட்ரா மாநிலம் தேவ்லாலியில் உள்ள ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்ச்ஸில் நடைபெற்ற 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்று நிறைவடைந்தது.
- 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதிமுதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த 182 வீரர்கள், பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.
- ஐ.நா. அவையின் சாசனத்தின் கீழ் உலகளவில் பல்வேறு நாடுகளிடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பரஸ்பர புரிதலை அதிகரிப்பதே XAW-2024 - ன் நோக்கமாகும்.
- இந்த பயிற்சியில் இரு நாட்டு இராணுவம், மற்றும் பீரங்கிப் படைகளின் கூட்டுத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை உபகரணங்களின் பயன்பாடு ஆகியவை இடம்பெற்றன.