29th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 அக்டோபர் மாதத்திற்கான, முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீடு
- எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 அக்டோபரில் 3.1 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.
- சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த, தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது.
- 2024 ஜூலை மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
- நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய் - கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.8 சதவீதம் குறைந்துள்ளது.
- இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
- பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் - பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- உரங்கள் - உர உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எஃகு - எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சிமெண்ட் - சிமெண்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மின்சாரம் - மின்சார உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2023 அக்டோபரை விட 2024 அக்டோபரில் 0.6 சதவீதம் குறைந்துள்ளது.
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024-25-ம் நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ள நிலையான விலைவாசி (2011-12) மற்றும் தற்போதைய விலைவாசி என இரண்டு விதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான மொத்த மதிப்பு குறியீடு அடிப்படை விலைவாசி தொடர்பான மதிப்பீடுகளின்படி பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்டுதோறும் மாறி வருகிறது.
- 2024-25-ம் நிதியாண்டுக்கான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது கடந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தித் துறையில் 2.2 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி துறையில் -0.1 சதவீதம் என்ற நிலையில் இருந்தபோதிலும் அரையாண்டிற்கான மொத்த வருவாய் இனம் 6.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- மத்திய அரசின் மொத்த வருவாய் அக்டோபர் 2024வரை 17,23,074 கோடி ரூபாய் ஆகும். இது 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 53.7 சதவீதம் ஆகும்.
- மொத்த வருமானத்தில் அக்டோபர் மாதம் வரையில் வரி வருவாய் 13,04,973 கோடி ரூபாயாகவும் வரி அல்லாத வருவாய் 3,99,294 கோடி ரூபாயாகவும், கடன் அல்லாத மூலதன வருவாய் 18,817 கோடியாகவும் உள்ளது.
- இதில் 7,22,976 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் வரிபகிர்வு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1,94,571 கோடி ரூபாய் கூடுதலாகும்.
- மத்திய அரசின் மொத்த செலவின தொகை (2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 51.3 சதவீதம்) 24,73,308 கோடி ரூபாயாகும். இதில் 20,07,353 கோடி ரூபாய் வருவாயின செலவினமாகவும், 4,66,545 கோடி ரூபாய் மூலதன செலவினமாகவும் உள்ளது.
- மொத்த வருவாயின செலவினங்களில் 5,96,347 கோடி ரூபாய் வட்டிக்கும் 2,48,670 கோடி ரூபாய் முக்கிய மானியங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
- கடந்த 10 நாட்களுக்கு முன், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து, நீண்ட துார இலக்குகளை தாக்கும், 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- இதை தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ்., அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன் உடைய, கே - 4 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கக் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, நிலம், ஆகாயம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை செலுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் உடையது. இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை.