19th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சீன மக்கள் தொகை பாதியாக குறையும் - ஐ.நா., கணிப்பு
- ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
- கடந்த 2021ல் சீன மக்கள் தொகை 141 கோடியாக இருந்தது. அதன்பிறகு மக்கள் தொகையில் சரிவு ஏற்படத் தொடங்கியது. 2025ல் சீன மக்கள் தொகை, 136 கோடி என்ற நிலையை எட்டி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- வரும் ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கடுமையான சரிவை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், சீர்குலைந்த குடும்ப நடைமுறைகள் காரணமாக, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
- இதன் விளைவாக, 2100ம் ஆண்டில் (இன்னும் 76 ஆண்டுகளில்) சீனாவின் மக்கள் தொகை, தற்போதைய நிலையில் இருப்பதில் பாதியாக குறைந்து விடும் என்று ஐ.நா., மதிப்பீடு செய்துள்ளது.
- மக்கள் தொகை குறைவு காரணமாக, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்; முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம், பென்சன் திட்டம், சுகாதார திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
- நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் மதிப்புமிக்க பசுமை உலக சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.
- நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கரி மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பான கொள்கைகளையும், செயல்முறைத் திறன்களையும் தீர்மானிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு நிலக்கரி அமைச்சகத்திற்கு உள்ளது.
- சமூக பொறுப்புணர்வுத் துறையில் முன்மாதிரியாக, தலசீமியா நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்க உதவியதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது வழங்கப்பட்டது.