TN ALERT செயலி / TN ALERT APP: வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN ALERT என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.
மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள்தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.
ENGLISH
TN ALERT APP: The Government of Tamil Nadu has developed a mobile application called TN ALERT in order to know information about weather forecast, current weather, amount of rain received, water availability in reservoirs in Tamil.
Fishermen are the most affected during the rainy season. The Government of Tamil Nadu has taken steps to bring timely information about storms and heavy rains to the fishermen going to fish in the deep sea through modern communication devices. Cities including Chennai should operate with extreme caution during this period.