பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA
TNPSCSHOUTERSOctober 26, 2024
0
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: முதன்மை நிறுவனங்களில் பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் முதல் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பல்வேறு தொழில்களிலும் வேலை வாய்ப்புகளிலும் நேரடியாக வணிகச் சூழலின் வெளிப்பாட்டை இளைஞர்கள் அறிவார்கள்.
2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் தொழில் பழகுநர் வாய்ப்புகள் வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்த லட்சிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் 2024, அக்டோபர் 3 அன்று தொடங்கப்பட்டது.
இது கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட www.pminternship.mca.gov.in என்ற இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த இணையதளம் தொழில் பழகுநர் நடைமுறை முழுவதையும் நிர்வகிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட தளமாக செயல்படும். தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்கும் பங்குதாரர் நிறுவனங்களுக்காக இணையதளம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2024, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் விண்ணப்பதாரர்களின் பதிவுக்காக திறக்கப்படும்.
பங்குதாரர் நிறுவனங்கள்
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு செலவினத்தில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி அடிப்படையில் இந்த முன்னோடித் திட்டத்திற்கான முதன்மை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் நிறுவனங்களின் பங்கேற்பு தன்னார்வமானது. இதுதவிர, இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் வேறு எந்த நிறுவனமும் / வங்கி / நிதி நிறுவனமும், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அவ்வாறு செய்யலாம்.
இது மேலே குறிப்பிடப்பட்ட 500 நிறுவனங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் துறைகள் மற்றும் பகுதிகளைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுக்கும்.
பங்குதாரர் நிறுவனம் தனது சொந்த நிறுவனத்தில் அத்தகைய தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்க முடியாவிட்டால், அதன் முன்னுள்ள அல்லது பின்னுள்ள மதிப்புத் தொடர் நிறுவனங்களுடன் (எடுத்துக்காட்டாக, சப்ளையர்கள் / வாடிக்கையாளர்கள் / விற்பனையாளர்கள்) அல்லது அதன் குழுவில் உள்ள பிற கம்பெனிகள் / நிறுவனங்களுடன் கூட்டு சேரலாம்.
இல்லையெனில், சகோதர நிறுவனங்கள், சப்ளையர்கள் அல்லது பெரு நிறுவனங்களின் விற்பனையாளர்கள் போன்ற தொடர்புடைய நிறுவனங்களில் தொழில் பழகுநர் இடம்பெறலாம்.
இருப்பினும், தொழில் பழகுநர் திட்டம் கூட்டாளர் நிறுவனங்களின் மேற்பார்வையில் இருக்கும். இது தரமான கற்றல் அனுபவத்தை உறுதி செய்யும்.
வேலைவாய்ப்பு காலம்
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: தொழில் பழகும் காலம் 12 மாதங்கள். தொழில் பழகும் காலத்தில் குறைந்தது பாதியளவு உண்மையான பணி அனுபவம் / வேலைச் சூழலில் செலவிடப்பட வேண்டும், வகுப்பறையில் அல்ல.
வயது
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: 21 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் (விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி), இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள், முழுநேர வேலையில் இல்லாதவர்கள், முழுநேரக் கல்வியில் ஈடுபடாதவர்கள். ஆன்லைன் / தொலைதூரக் கல்வி படிப்புகளில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ.யில் சான்றிதழ் பெற்றவர்கள், பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றவர்கள் அல்லது பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.பார்மா போன்ற பட்டதாரிகள்.
விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்
ஐஐடி, ஐஐஎம், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்இஆர், என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள்.
சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்பிஏ போன்ற தகுதிகளைக் கொண்டவர்கள்; ஏதேனும் முதுநிலை அல்லது உயர்நிலை பட்டம் பெற்றவர்கள்.
மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏதேனும் திறன், தொழிற்பயிற்சி, உள்ளகப் பயிற்சி அல்லது மாணவர் பயிற்சித் திட்டத்தில் பயின்று வருபவர்கள்.
தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் அல்லது தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் தொழில் பழகுநர் பயிற்சியை முடித்தவர்கள்.
விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரின் வருவாய் 2023-24 நிதியாண்டில் ரூ .8 லட்சத்திற்கு மேல் இருந்தால்.
குடும்ப உறுப்பினர் எவரேனும் நிரந்தர அரசு ஊழியராக இருந்தால்.
முன்னோடித் திட்டத்தின் நோக்கஙகள்
"குடும்பம்" என்பது சம்பந்தப்பட்டவர், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணை என்று பொருள்படும்.
"அரசு" என்பது மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகம், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றைக் குறிக்கும்.
"பணியாளர்" என்பது முறைப்படுத்தப்பட்ட / நிரந்தர ஊழியர்கள் என்று பொருள்படும், ஆனால் ஒப்பந்த ஊழியர்களை உள்ளடக்காது.
நிதி உதவி
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும். இதில் ரூ.4,500 அரசால் வழங்கப்படும். ரூ.500 நிறுவனம் தனது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து வழங்கும்.
கூடுதலாக, தொழில் பழகுநர் பணியில் சேரும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தற்செயலான உதவிகளுக்காக ரூ.6,000 ஒரு முறை மானியமாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மூலம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான செலவுகள், தற்போதுள்ள விதிகளின்படி, நிறுவனம் அதன் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து ஏற்கப்படும்.
ஒரு நிறுவனம் ரூ.500-க்கு மேல் மாதாந்தர உதவித் தொகையாக வழங்க விரும்பினால், நிறுவனம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கலாம்.
காப்பீட்டுத் திட்டம்
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் பயிற்சி பெறும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் காப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும். கூடுதலாக, நிறுவனம் பயிற்சியாளர்களுக்கு கூடுதல் விபத்து காப்பீட்டுத் தொகையையும் வழங்கலாம்.
வசதி மற்றும் உதவி
பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம் / PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: இத்திட்டம் ஒரு பிரத்யேக குறை தீர்க்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. இது பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்கிறது. பயனீட்டாளர்களின் திருப்தியை மேம்படுத்துகிறது.
கூடுதலாக, 1800-116-090 என்ற பன்மொழி தொலைபேசி உதவி எண் பங்குதாரர்களுக்கு உதவியையும் வசதிகளையும் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு மொழிகளில் பயனர்களுக்கு அணுகக்கூடிய ஆதரவை உறுதி செய்கிறது.
ENGLISH
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: Pradhan Mantri National Apprenticeship Mela in Primary Institutions has been announced in the Budget 2024-25.
It aims to provide career opportunities to one crore youth in top 500 companies in five years. Through this program, the youth will get hands-on exposure to the business environment in various industries and job opportunities.
2024, a pilot project to implement this ambitious scheme was launched on October 3, 2024, which aims to provide 1.25 lakh job opportunities in the financial year 2024-25.
It will be implemented through the website www.pminternship.mca.gov.in developed by the Ministry of Corporate Affairs. This website will serve as a centralized platform for managing the entire process of the practitioner.
The website is now open to partner companies offering career opportunities. 2024 will open for registration of candidates in second week of October.
Partner companies
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: Flagship companies for this pilot program have been identified based on the average of the last three years in corporate social responsibility spending. Companies' participation in the program is voluntary.
Further, any other company / bank / financial institution desiring to participate in the scheme may do so with the approval of the Ministry of Corporate Affairs. It takes a decision by considering the sectors and regions represented by the 500 companies mentioned above.
If the partner company is not able to provide such business opportunities within its own organization, it may partner with upstream or downstream value chain organizations (for example, suppliers / customers / vendors) or with other companies / organizations within its group; Otherwise, business associates may be involved in related companies, such as sister companies, suppliers, or vendors of larger companies. However, the mentoring program will be under the supervision of the partner institutions. This will ensure a quality learning experience.
Employment period
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: Internship period is 12 months. At least half of the internship period should be spent in real work experience/work environments, not in the classroom.
Age
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: Youth between 21 to 24 years of age (as per last date of submission of application), Indian Citizen, not in full-time employment, not in full-time education. Candidates enrolled in online / distance education courses are eligible to apply.
Educational qualification
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: High School, Secondary School Passed, Certificate from ITI, Diploma from Polytechnic Institute or BA, BSc, BCom, BCA, BBA, Graduates like B.Pharma.
The following are not eligible to apply
Graduates from IIT, IIM, National Law Universities, IISER, NIT, IIIT.
Holders of qualifications such as CA, CMA, CS, MBBS, BDS, MBA; Any Masters or higher degree holders.
Undergoing any skill, vocational training, internship or student training program under Central or State Government schemes.
Those who have completed Vocational Training under National Vocational Training Scheme or National Vocational Promotion Scheme.
If the income of any member of the applicant's family exceeds Rs.8 lakhs in the financial year 2023-24.
If any member of the family is a permanent Government servant.
OBJECTIVES OF THE PILOT PROJECT
"Family" means the person concerned, parents and spouse.
"Government" means Central, State Governments, Union Territory Administration, Central and State Public Sector Undertakings, statutory bodies, local bodies etc.
"Employee" means regularized / permanent employees but does not include contractual employees.
Financial assistance
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: The interns will be given a monthly financial assistance of Rs.5,000. Out of which Rs.4,500 will be provided by the government. 500 will be provided by the company from its corporate social responsibility fund.
In addition, a one-time grant of Rs.6,000 will be provided by the Ministry of Corporate Affairs for incidental assistance to each trainee who joins the vocational training programme.
The expenses related to training of trainers under this scheme will be borne by the company from its corporate social responsibility fund as per existing rules.
If an organization wishes to provide monthly assistance of more than Rs.500, the organization can provide it from its own funds.
Insurance plan
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: Insurance coverage will be provided by the government to every trainee undergoing training under the central government insurance schemes, Prime Minister's Jeevan Jyoti Bhima Yojana, Prime Minister's Suraksha Bhima Yojana.
In addition, the company may also provide additional accident insurance coverage to the trainees.
Facilitation and assistance
PMNAM - PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA: The scheme has a dedicated grievance redressal system. This ensures timely resolution of issues. Improves user satisfaction. Additionally, a multilingual helpline number 1800-116-090 has been set up to provide assistance and facilities to stakeholders. It ensures accessible support for users in various languages.