
28th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
- தமிழகத்தில் இந்தாண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. கோடை காலத்தையும் தாண்டி வெப்பம் நீடித்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர். வயதானவர்கள் பலர் மருத்துவமனையை நாடினர்.
- வெப்ப அலையால் மரணம் அடைந்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
- வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
- வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்குவதற்கு மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள “தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்” திறந்து வைத்தல் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
- அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் அவர்களின் நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதல்வர் திறந்து வைத்தார். இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும்.
- ராணுவ வீரர்கள் மற்றம் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட, விமானத்தில் இருந்து குண்டுகளை வீச, விஐபி பயணத்துக்குப் பயன்படுத்த என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட C-295 விமானங்களை முழுவதுமாக உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) குஜராத்தின் வதோதராவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
- ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்-ம் இணைந்து இந்நிறுனத்தை தொடங்கி வைத்தனர்.