
27th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டம்
- 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடியாக இருந்தது. அதேசமயம், 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 2923 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. 2013-14-ம் நிதியாண்டில், வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.33,000 கோடியாக இருந்தது.
- இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியாக உள்ளது. இது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த நிதி ஒதுக்கீடாகும்.
- ஆண்டுதோறும் லோன்லி பிளானெட்டின் (Lonely Planet) வெளியிடப்படும் பட்டியலில், உலகின் சிறந்த இடங்களை கொண்டாடும் வழக்கம் உள்ளது.
- அந்த வகையில் இதில் டாப் இடங்களில் புதுச்சேரி 2ம் இடம் பிடித்துள்ளது. மேலும் புதுச்சேரி இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய இடமாகும்.
- 2025 சிறந்த பயண இடங்கள் பட்டியலில் 30 அற்புதமான இடங்களை நகரங்கள், நாடுகள் மற்றும் பகுதிகள் என வகைப்படுத்தி விரிவாக விளக்குகிறது.
- பிரான்ஸின் துலூஸ் (Toulouse) நகரம் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், புதுச்சேரி இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகத் திகழ்கிறது.