
21st OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி
- இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு விமானப்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமானப்படை நிலையத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியின் 12வது பதிப்பை தொடங்கின.
- பயிற்சியின் இருதரப்பு கட்டம் நவம்பர் 13 முதல் இன்று வரை நடத்தப்படும், இது இரு படைகளுக்கும் இடையே தீவிர ஒத்துழைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
- 2024ஆம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப் போட்டி, மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நேற்று நடைப்பெற்றது. இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய ரிகர்வ் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர்.
- இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி. வில்வித்தை உலகக் கோப்பை இறுதி போட்டியில், தீபிகா குமாரி ரன்னர் அப் ஆவது இது ஐந்தாவது முறையாகும்.
- இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார் தீபிகா குமாரி. சீன வீராங்கனை லி தனது முதல் முயற்சியிலேயே உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றார்.