20th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.
- இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்கள், ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் அக்டோபர் 13 முதல் 18 வரை கோவா கடற்கரைக்கு அப்பால் இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியான நசீம்-அல்-பஹ்ரில் பங்கேற்றன.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி மேலும் உறுதிப்படுத்தியது.