நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது.
2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY / MEDICINE 2024
2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க உதவுகிறது.
மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது. அவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
என்ன ஆராய்ச்சி?
2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024: மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றது.
எலும்பில் உள்ள உயிரணுக்கள், நரம்பில் உள்ள உயிரணுக்கள், தோலில் உள்ள உயிரணுக்கள், இதயத்தில் உள்ள உயிரணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த மரபணு தகவல்களை வெவ்வேறு சிறப்பு வழிகளில் பயன்படுத்துகின்றன.
மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும், எனவே மைக்ரோ RNA உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறை புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு கோளாறுகள் போன்ற உடலில் பிரச்னைகள் ஏற்படலாம்.
70 வயதான பேராசிரியர் அம்ப்ரோஸ் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியிலும், 72 வயதான பேராசிரியர் ருவ்குன ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியிலும் பணிபுரிகின்றனர்.
உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களை ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முந்தைய நோபல் பரிசு வெற்றியாளர்கள்
2023 - கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (mRNA கோவிட் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக)
2022 - ஸ்வாண்டே பாபோ (மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காக)
2021 - டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (நமது உடல் தொடுதல் உணர்வு மற்றும் வெப்பநிலையை எவ்வாறு உணர்கிறது என்பதற்கான ஆராய்ச்சிக்காக)
2020 - மைக்கேல் ஹூட்டன், ஹார்வி ஆல்டர் மற்றும் சார்லஸ் ரைஸ் (ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக)
2019 - சர் பீட்டர் ராட்க்ளிஃப், வில்லியம் கெய்லின் மற்றும் கிரெக் செமென்சா (செல்கள் ஆக்ஸிஜன் அளவை எவ்வாறு உணர்கின்றன மேலும் அதற்கேற்றபடி எவ்வாறு அவற்றை மாற்றிக்கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்காக)
2018 - ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் தசுகு ஹோன்ஜோ (உடலின் நோயெதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
2017- ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் (நமது உடல் எப்படி சிர்க்காடியன் ரிதம் அல்லது கடிகாரத்தை வைத்தது போல செயல்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
2016 - யோஷினோரி ஓசுமி (கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் செல்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSICS 2024
2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSICS 2024: மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான பரிசு பேராசிரியர்கள் ஜான் ஜே.ஹாஃப் ஃபீல்டு மற்றும் ஜெஃப்ரி இ. ஹிண்டன் ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட உள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜான் ஹாப்ஃபீல்ட் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெஃப்ரி ஹிண்டன் கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
வேதியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும்(அக்.9), இலக்கியத்துக்கானது வியாழக்கிழமையும் (அக்.10) அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை (அக்.11), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.
ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் நோபல் விருதுகள் வழங்கப்படும்.
2024ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2024
2024ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2024: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சிறந்த பங்களிப்புகளைச் செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. முதலாவது, 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய மூவருக்குக் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பின் கணிப்பு ஆகியவற்றில் தங்களின் ஆராய்ச்சிகள் மூலம் significant பங்களிப்புகளை அளித்துள்ளனர்.
இந்த ஆண்டின் நோபல் பரிசுகள், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் அறிவியல் சமூகத்திற்கான முக்கிய நிகழ்வாகும்.
2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024
2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024: ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி என பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
அந்தந்த துறைகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை படைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, 2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியா பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் எழுத்தாளரான ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று நோபல் பரிசு அகாடமி தெரிவித்துள்ளது.
யார் இந்த தென்கொரிய பெண்?
2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN LITERATURE 2024: 1970 ஆம் ஆண்டு தென் கொரிய நகரமான குவாங்ஜூவில் பிறந்தவர் ஹான் காங். தனது ஒன்பது வயதில் தனது குடும்பத்துடன் சியோலுக்குச் குடிப்பெயர்ந்தார். இவர் இலக்கிய பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தந்தையே போலவே பெண் ஹான் காங்க்கும் சிறுவயதில் இருந்தே எழுத்து மீது மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இவர் எழுதுவதோடு இல்லாமல், கலை, இசை சார்ந்தும் இயங்கி வருகிறார்.இவர் முதலில் இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995ஆம் ஆண்டு 'லப் ஆஃப் யோசு' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.
இதன்பிறகு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகள் வெளியிட்டார். இதன்பிறகு 2007ஆம் ஆண்டு 'தி வெஜிடேரியன்' என்ற நாவலை எழுதினார்.
இந்த நாவல் சர்வதேச அளவில் ஹன் கங்குக்கு புகழை தேடி தந்தது. வழக்கமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்று கொள்ள மறுக்கும் கதாநாயகன் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளை பேசியது இந்த நாவல்.
இறைச்சியை உண்ண மறுப்பதால் மோசமான வன்முறைகளை சந்திக்கிறது அந்த கதாபாத்திரம்இதுபோன்ற பல நாவல்கள், சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றர் ஹான் காங். இந்த நிலையில், தற்போது இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PEACE 2024
2024ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PEACE 2024: இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலர்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
கடந்த 1901-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவர் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவர், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தார்.
தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவர் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவு தினமான டிச 10-ம் தேதி பரிசு வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (அக்.11) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹான் ஹிடாங்கியோ என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதற்கு அந்த அமைப்பு எடுத்து வரும் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2024
2024ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2024: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். மருத்துவம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் கொடுக்கப்படும்.
இந்தாண்டு மருத்துத்திற்கான நோபல் பரிசு கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இப்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.
ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன, அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது. நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.