
19th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
- புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.
- மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணி சேவையை வழங்க முயற்சிக்கிறது.
- தேசிய கற்றல் வாரம் (என்எல்டபிள்யூ) அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும்.
- "ஒரே அரசு" என்ற செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து, வாழ்நாள் கற்றலை இது ஊக்குவிக்கும்.
- திருமதி விஜய கிஷோர் ராஹத்கர் தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் 9-வது தலைவராக இருப்பார்.
- மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் (2016-2021) தலைவராக இருந்த காலத்தில், "சக்ஷாமா" (ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு ஆதரவு), "பிரஜ்வாலா" (சுய உதவிக் குழுக்களை மத்திய அரசு திட்டங்களுடன் இணைத்தல்) மற்றும் "சுஹிதா" (பெண்களுக்கான 24x7 ஹெல்ப்லைன் சேவை) போன்ற முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
- தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக டாக்டர் அர்ச்சனா மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.