12th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆந்திரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவிப்பு
- ஆந்திரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தின் முதல் தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- ஆந்திரப் பிரதேசம் ரூ. 395.5091 கோடி யூனிஃபைட் மானியத்தையும் ரூ. 593.2639 கோடி டைட் மானியத்தையும் பெற்றுள்ளது. இந்த நிதி ஆந்திரப் பிரதேசத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 9 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 615 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 12,853 கிராம பஞ்சாயத்துகளுக்கு உரியதாகும்.
- ராஜஸ்தானில், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 22 மாவட்டப் பஞ்சாயத்துகள், தகுதியான 287 வட்டாரப் பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான 9,068 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ .507.1177 கோடி யூனிஃபைட் மானியமும் ரூ .760.6769 கோடி டைட் மானியமும் விடுவிக்கப்பட்டுள்ளன.