காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024 / RENEWAL AND LIFE EXTENSION POLICY FOR WIND POWER PLANTS 2024
TNPSCSHOUTERSSeptember 08, 2024
0
காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024 / RENEWAL AND LIFE EXTENSION POLICY FOR WIND POWER PLANTS 2024: தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு முதல் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட காற்றாலைகள் குறைந்த திறன் கொண்ட பழைய காற்றாலைகள் ஆகும்.
இக்காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க காற்றாலைகளை புனரமைத்தல் (Wind Repowering), புதுப்பித்தல் (Wind refurbishment) மற்றும் ஆயுள் நீட்டிப்பு (Wind Life Extension) ஆகிய மூன்று வழிகள் அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25% அதிகரிக்க இக்கொள்கை வழிவகுக்கும்.
மேற்கண்ட மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயம் செய்துள்ள 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50% பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்யும்.
தமிழக அரசு புதுப்பிக்கத்த எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்காக தனது முதல் புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இதுபோன்ற கொள்கையை கொண்டு வந்த முதல் மாநிலம் என கூறப்படுகிறது. இந்த கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2030 மார்ச் 31ம் தேதி வரை அல்லது புதிய மறுசீரமைப்பு கொள்கை அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த கொள்கை காற்றாலை மின் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதன் மூலம் காற்றாலை ஆற்றல் வளங்களை சிறப்பாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த கொள்கையின்படி, ஒற்றை உரிமையாளர்களுக்கு தனித்த திட்டங்களாகவும், பல உரிமையாளர்களுக்கு ஒருங்கிணைப்பு திட்டங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
20 வருட பழமையான அனைத்து காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கட்டாயம் கொள்கையில் இணைய வேண்டும், மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இணையலாம்.
உரிமையாளர்கள் தங்கள் காற்றாலைகளை மீட்டெடுக்க, ஒரு மெகாவாட்டிற்கு ₹30 லட்சம் மேம்பாட்டு கட்டணமாக செலுத்த வேண்டும்.
மறுபயனளிக்கப்பட்ட விசையாழிகளின் ஆயுட்காலம், மறுபயனேற்றத்திற்குப் பிறகு இயக்கப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த கொள்கையின் கீழ், காற்றாலைகள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரி மின் உற்பத்தியில் 90 சதவீதம் அடைந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும்.
20 ஆண்டுகள் செயல்பட்ட அல்லது வடிவமைப்பு ஆயுளை முடித்த 90 நாட்களுக்குள் காற்றாலைகள் ஆயுள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது, 2018 மார்ச் 31ம் தேதிவரை செயல்பாட்டுக்கு வந்த காற்றாலைகளுக்கான வருடாந்திர வங்கி ஏற்பாடுகள் அனுமதிக்கப்படுகிறது.
இந்த கொள்கையின்படி 20 ஆண்டுகால செயல்பாட்டை முடித்த காற்றாலைகள் தகுதிபெறும், ஆனால் அவை மறுபயனேற்றம், புதுப்பித்தல், அல்லது ஆயுள் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதே நிதியாண்டில் மே முதல் மார்ச் வரையிலான 50 சதவீத வங்கி வசதிகளை மட்டுமே பசுமை எரிசக்தி கழகம் அங்கீகரிக்கும். முதன்முறையாக காற்றாலை திட்டங்களை காற்றாலை-சூரிய சக்தி இணைந்த திட்டங்களாக மாற்ற தமிழகமும் அனுமதி அளித்துள்ளது.
ENGLISH
RENEWAL AND LIFE EXTENSION POLICY FOR WIND POWER PLANTS 2024: Wind turbines have been installed in Tamil Nadu since 1984 and play an important role in power generation. The above wind farms are old wind farms with low efficiency.
Wind Repowering, Wind Refurbishment and Wind Life Extension are allowed three ways to increase the power generation capacity of these wind turbines. This policy will lead to a further 25% increase in Tamil Nadu's wind power generation.
Through the above three policies, our state's clean, green energy will be increased and these policies will help achieve the lofty goal of 50% green power generation in Tamil Nadu's power structure by 2030 set by the Chief Minister of Tamil Nadu.
The Government of Tamil Nadu has also created an organization called Tamil Nadu Green Energy Corporation to promote renewable energy. Tamil Nadu government has introduced its first renewal and life extension policy 2024 for wind energy projects.
Tamil Nadu is said to be the first state in India to introduce such a policy. This policy will remain in force from the date of issue till 31st March 2030 or until a new revised policy is announced.
The policy aims at better utilization of wind energy resources by supporting wind power producers. According to this principle, single proprietorships are classified as stand-alone schemes and multi-proprietorships as consolidation schemes.
All 20-year-old wind power generators must join the policy, and others can join if they wish. Owners have to pay a development fee of ₹30 lakh per MW to restore their wind farms. The life of recycled turbines shall not exceed 25 years from the date of commissioning after recycling.
Under this policy, if the wind turbines reach 90 percent of average power generation in the last 3 years, life extension will be given for the next 5 years. Wind turbines must apply for life extension within 90 days of completing 20 years of operation or design life.
Currently, annual bank arrangements are allowed for wind farms that have become operational up to March 31, 2018. Wind turbines that have completed 20 years of operation are eligible under this policy, but must agree to reuse, renovation, or life extension.
The Green Energy Corporation will approve only 50 percent of bank facilities from May to March in the same financial year. For the first time, Tamil Nadu has also given permission to convert wind projects into combined wind-solar power projects.