Type Here to Get Search Results !

1st AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


1st AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உலகில் அலுமினியம் உற்பத்தி செய்யும் 2-வது பெரிய நாடாக திகழும் இந்தியா
  • அலுமினியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, 2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) 10.28 லட்சம் டன்னாக இருந்த அலுமினியம் தாது உற்பத்தி நடப்பு நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 10.43 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 1.2 சதவீதம் அதிகமாகும்.
  • இதே போன்று இரும்புத் தாது உற்பத்தியும், 9.7 சதவீதம் வளர்ச்சி அடைந்து 79 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், சுண்ணாம்புக் கல் உற்பத்தி 1.8 சதவீதம் வளர்ச்சியடைந்து 116 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், மாங்கனீசு தாது உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 1.0 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் உள்ளன.
  • இதன் மூலம் அலுமினியம் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகவும், சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் 3-வது பெரிய நாடாகவும், இரும்புத் தாது உற்பத்தியில் 4-வது பெரிய நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
இந்தியாவிற்கு 3வது பதக்கம்
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்று கடைசிப்போட்டியில் ஸ்வப்னில் குசலே 590-38x புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
  • இறுதிப்போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பங்கேற்ற குசலே 6 சுற்றுகளில் 451.4 புள்ளிகளை எடுத்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை தட்டிச்சென்றார்.
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் நியமனம்
  • லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், ஆகஸ்ட் 01, 2024 அன்று, ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். 
  • இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஏர் மார்ஷல் நிலையில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) பிரிவின் தலைமை இயக்குநராக பதவி வகித்த முதல் பெண் இவர் ஆவார்.
  • லெப்டினன்ட் ஜெனரல் நாயர் புனேயின் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். டிசம்பர் 1985 இல் ராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார்.
பட்டியலின சமூகத்தினரகளுக்கான உள்இடஒதுக்கீட்டு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பட்டியலின சமூகத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்ட்ட இடஒதுக்கீட்டு முறையில் உள்இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார்.
  • இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின.
  • இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது. 
  • அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளித்தனர்.
  • இதில் தலைமை நீதிபதி உட்பட 6 நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். 6 நீதிபதிகளும் மாநிலங்கள் அறிவித்த உள்இடஒதுக்கீடு செல்லும் என்றும், அந்த உள்இடஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வின் 14வது பிரிவை மீறவில்லை. 
  • பட்டியல் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் மாநில அரசுகள் உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்தனர்.
  • நீதியரசர் கவாய் குறிப்பிட்ட தீர்ப்பில், “எஸ்சி எஸ்டி பிரிவினரிடையே உள்ள கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவை அடையாளம் கண்டு அவர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களை வெளியேற்றுவதற்கு அரசு ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இதுவே உண்மையான சமத்துவத்தை பெறுவதற்கான ஒரே வழியாகும் என குறிப்பிட்டார்.
  • நீதிபதி விக்ரம் நாத் இந்தக் கருத்தை ஆமோதித்து, ஓபிசிக்களுக்குப் பொருந்தும் கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவு கொள்கை பட்டியலினத்தவர்களுக்கு பொருந்தும் என்று கூறினார்.
  • நீதிபதி பங்கஜ் மீத்தல் கூறுகையில், இந்த உள்இடஒதுக்கீட்டை முதல் தலைமுறையினருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறையைச் சேர்ந்த எவரேனும் உள்இடஒதுக்கீட்டின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்திருந்தால், 2வது தலைமுறையினர் இடஒதுக்கீட்டை பெற கூடாது என்று நீதிபதி மித்தல் கூறினார்.
  • நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறுகையில், கிரீமி (creamy layer) லேயர் எனப்படும் உட்பிரிவு கொள்கை போல பட்டியலினத்தவர்களை அடையாளம் கண்டு மாநிலத்தின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி கவாயின் கருத்தை போல தீர்ப்பை குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel