
29th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ் என்ற திட்டத்தை அணுசக்தி துறை தொடங்கியுள்ளது
- ‘ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ்’ என்ற திட்டம் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், படிப்பதற்கும் ஒரே குடையின் கீழ், அணுசக்தித் துறையின் அனைத்து அலகுகள்/ துணை அலகுகளை ஒருங்கிணைப்பது இந்தத் திட்டத்தின் தனித்துவமாகும்.
- இந்த முன்முயற்சி காரணமாக டிஜிட்டல் முறையிலும், கூட்டாகவும் ஆதார வளங்களைப் பகிர்ந்துகொள்வது சாத்தியமாகும். இதற்காக வைலி இந்தியா பிரைவேட் லிமிட்டெட், ஸ்பிரிங்கர் நேச்சர் குரூப் ஆகியவற்றுடன் அணுசக்தித் துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமத்தின் கூட்டம் 2024, ஜூலை 29 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மூலதன கொள்முதல் திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டன.
- இந்திய ராணுவத்தின் கவச போர் வாகனங்களுக்கான கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரை ஏற்கப்பட்டது.
- இந்தக் கருவிகள் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும் பிரிவின் கீழ் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், விரைவாக இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட அதிநவீன அமைப்புடன் கூடிய 22 இடைமறிப்பு படகுகளை கொள்முதல் செய்வதற்கும் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் படகுகள் கடலோர கண்காணிப்பு, தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
- காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் முத்தீஸ்வரா் சந்நிதி தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (54). இவா் காஞ்சிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறாா்.
- நிகழாண்டுக்கான மத்திய அரசு வழங்கும் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
- வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் இவருக்கு மத்திய அரசின் சாா்பில் தாமிர பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியன வழங்கப்படவுள்ளன.
- “நீடித்த வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய அறிவு” என்பது குறித்த முதலாவது அறிவியல், தொழில்நுட்ப, புதிய கண்டுபிடிப்பு மாநாடு இன்று (29.07.2024) புதுதில்லியில் தொடங்கியது.
- யுனெஸ்கோ ஆதரவுடன் வளரும் நாடுகளுக்கான சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு மையமும், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து இந்த 3 நாள் மாநாட்டை நடத்துகின்றன.
- சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வி இந்த மாநாட்டை தொடங்கிவைத்தார்.
- ஐதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் டி.சீனிவாச ரெட்டி, புதுதில்லியில் உள்ள யுனெஸ்கோ இயற்கை அறிவியல் நிபுணர் டாக்டர் பென்னோ போயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
- பெங்களூரூவில் உள்ள பலவகை துறைகளுக்கான பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், துணைவேந்தருமான பேராசிரியர் ஆனந்த் தர்ஷன் சங்கர் முக்கிய உரையாற்றினார்.