மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024
TNPSCSHOUTERSJuly 23, 2024
0
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: 18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது.
இந்த நிலையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி
மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி
நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9%
நிதிப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டில் 4.5 சதவீதத்திற்கும் குறைவான நிலையை எட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பணவீக்க விகிதம் குறைந்த அளவில் தொடரவும் 4 சதவீதம் என்ற இலக்கை அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவு மற்றும் எரிபொருள் அல்லாத முக்கியப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 3.1 சதவீதமாக இருக்கும்.
பட்ஜெட் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மக்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரியில் என்ன மாற்றம்?
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, நிலையான கழிவு (standard deduction) ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
மேலும் புதிய வருமான வரி திட்டத்தில், மூன்று லட்சம் வரை சம்பளம் பெற்றால் வரி இல்லை.
மூன்று முதல் ஏழு லட்சம் வரை 5% வரி. ஏழு முதல் 10 லட்சம் வரை 10% வரி.
10 முதல் 12 லட்சம் வரை 15% வரி. 12 முதல் 15 லட்சம் வரை 20% வரியும், 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றால் 30% வரியும் விதிக்கப்படும்.
பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
2024 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்
விவசாய துறையில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன
32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம்
தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் மட்டும் 3 அதிவேக சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆந்திரா வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதி உதவி.
ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
ஹைதராபாத் - பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் அமைக்கப்படும்
பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கும் கடன் தொகையின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. (முன்பு கடனை சரியாக செலுத்தியவர்களுக்கு)
ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு.
நியாய விலைக் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும்
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்காக பிகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பிகாருக்கு 26,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படும்.
வீடுகளின் மேல், சூரிய ஒளித் தகடுகள்(சோலார் பேனல்) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் 1 கோடி வீடுகளுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 300 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் நிலை உருவாகும்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தியாவிலுள்ள 100 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
அரிய வகை கனிம (Rare Earth Metals) உற்பத்திக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்
பிரதமர் ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும்.
மொபைல் பிசிடிஏ (பிரிண்டட் சர்க்யூட் டிசைன் அசெம்பிளி) மற்றும் மொபைல் சார்ஜர்களுக்கான அடிப்படை சுங்க வரி (பிசிடி) 15% ஆக குறைக்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்காக விரிவுபடுத்துகிறது. இந்த இலக்கை அடைய, ரூ.1,000 கோடி மூலதன நிதி நிறுவப்படும்.
காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு(Climate change and mitigation) திட்டங்களுக்கு சிறப்பு கொள்கை உருவாக்கப்படும்
எதன் விலை குறையும்?
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: பட்ஜெட்டில் சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சார்ஜர்கள் மீதான சுங்க வரியும் 15 சதவீதம் குறைக்கப்படும்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி ஆறு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
எதன் விலை அதிகரிக்கும்?
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரி 10 சதவீதம் அதிகரித்துள்ளது
மக்காத பிளாஸ்டிக்கிற்கான சுங்க வரி 25% அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தையில் ஓராண்டுக்கும் குறைவான முதலீடுகள் மீதான வரி 15ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
பங்குச்சந்தையில் ஓராண்டுக்கு மேல் முதலீட்டுக்காம வரி 10ல் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சில வகையான தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு திட்டங்கள்
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் ஐடிஐ-க்கள் உருவாக்கப்படும்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும்.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சிவழங்கப்படும். இத்திட்டத்தின்போது மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கப்படும்.
4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில், புதிய கொள்கை வகுக்கப்படும்.
வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
முதல் முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தப்படும்.
வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.
கல்வி திட்டங்கள்
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு அரசு நிதியுதவி அளிக்கும். இ-வவுச்சர்கள் மூலம் இந்த உதவி வழங்கப்படும், இது ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் மற்றும் கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.
இது தவிர, திறன் மேம்பாட்டுத் துறைக்கான பல திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் வளர்ச்சிக்காக 1.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் குறித்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படும்.
ஐந்து மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்ட் வழங்கப்படும்
இறால் இனப்பெருக்க மையங்களின் கட்டமைப்பை நிறுவ நிதி உதவி வழங்கப்படும்
அதிக மகசூல் மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வகையில் 32 விவசாய பயிர்களில் 109 ரகங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை மேம்படும்.
இயற்கை விவசாயம் குறித்து நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படும்
நகைகளுக்கான வரி
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆகவும், பிளாட்டினம் மீதான சுங்க வரியை 6.5% ஆகவும் குறைக்கப்படும்.
பிகார், ஆந்திராவுக்கு திட்டங்கள்
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து துறை வளர்ச்சிக்காகவும் 'பூர்வோதயா' திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும்.
பிகார் மாநில வளர்ச்சிக்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் / KEY FEATURES OF UNION BUDGET 2024: ஏற்கனவே உருவாக்கப்படும் இரண்டு விரைவு வழிச்சாலை இல்லாமல், மேலும் 3 விரைவு வழிச்சாலை பிகார் வழியாக அமைக்கப்படும்.
பக்சர் மாவட்டத்தில் உள்ள கங்கா ஆற்றின் மேல், புதிய பாலம் அமைக்கப்படும். இது இருவழிச்சாலையாக அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவிப்பு.
நாளந்தா சுற்றுலா மையத்தை மேம்படுத்த நிதியுதவி அளிக்கப்படும்.
விஷ்ணுபாத் கோவில் மற்றும் கயாவிலுள்ள மகாபோதி கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்தப்படும். இத்துடன் ராஜ்கீரிலுள்ள சமண கோவிலும் மேம்படுத்தப்படும்.
பிகாரில் வெள்ளத்தால் ஏற்படும் சேதம், பயிர் பாதிப்புகளை களைய உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக கோசி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ENGLISH
KEY FEATURES OF UNION BUDGET 2024: After the National Democratic Alliance won the 18th Lok Sabha elections, the Cabinet led by Prime Minister Modi took office last month.
In this situation, Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the year 2024-2025 at 11 am today (July 23). He read the budget speech for one hour and 25 minutes.
Total revenue excluding loans is Rs 32.07 lakh crore
The total expenditure is Rs.48.21 lakh crore
Net tax revenue is Rs.25.83 lakh crore
Fiscal Deficit 4.9% of GDP
Steps will be taken to reduce the fiscal deficit to less than 4.5 percent in the next year.
Measures will be taken to keep the inflation rate low and achieve the target of 4 percent. Inflation rate for non-food and non-fuel core items will be 3.1 percent.
The budget has been prepared keeping in mind employment, skill development, micro, small, medium enterprises and people belonging to the middle class.
What is the change in income tax?
KEY FEATURES OF UNION BUDGET 2024: For those opting for the new income tax scheme, the standard deduction has been increased from Rs 50,000 to Rs 75,000.
And in the new income tax scheme, salary up to three lakhs is tax-free.
Three to seven lakhs 5% tax. 10% tax between 7 to 10 lakhs.
10 to 12 lakhs 15% tax. 12 to 15 lakhs will be taxed at 20% and above 15 lakhs will be taxed at 30%.
There is no change in the old income tax scheme.
Highlights of Budget 2024
KEY FEATURES OF UNION BUDGET 2024: Plan to involve one crore farmers in organic farming in next 2 years
All infrastructures are ready for digital revolution in agriculture sector
Introduction of 109 varieties of high yielding crops in 32 horticultural crops
Much emphasis has been given to the production and storage of cereals and oilseeds
1.52 lakh crores allocation for agriculture sector.
Measures to increase production of pulses, edible oil.
Emphasis will be given to the development of the eastern states of the country.
Only 3 expressway projects are to be implemented in the state of Bihar.
15,000 crore financial assistance for development of Andhra Pradesh.
Additional funds will be allocated for various projects like river water and road development in Andhra Pradesh
Hyderabad-Bangalore Defense Logistics Industry Corridor Project to be set up
Additional funds for setting up airports, medical colleges in Bihar
Under the Prime Minister's Housing Scheme, funds will be allocated to build 1 crore houses this year.
The maximum loan amount disbursed through the Mudra loan scheme has been increased from Rs 10 lakh to Rs 20 lakh. (For those who have paid the loan properly before)
₹2.66 lakh crore budget allocation for rural development.
The Pradhan Mantri Garib Anna Yojana, which provides foodgrains to poor people through fair price shops, will be extended for the next 5 years. Through this, food grains will be provided to 80 crore people
100 crore rupees have been allocated in the central budget for the development of small and micro enterprises.
Notification to allocate special funds to Bihar and Andhra states for various projects. Rs 15,000 crore will be allocated to Andhra Pradesh and Rs 26,000 crore to Bihar.
On top of the houses, the solar panel power generation project is being expanded to cover 1 crore houses. This will provide free electricity to households using up to 300 units.
3 lakh crore will be allocated for women and child development projects.
Steps will be taken to improve drinking water and sewerage schemes in 100 cities in India
High priority will be given to the production of rare earth metals
One crore houses will be built in urban areas through Pradhan Mantri Awas Yojana 2.0
An expressway will be constructed between Chennai and Visakhapatnam.
Basic Customs Duty (PCT) on Mobile PCTA (Printed Circuit Design Assembly) and Mobile Chargers is reduced to 15%.
The space economy is set to expand fivefold over the next 10 years. To achieve this goal, a capital fund of Rs.1,000 crore will be established.
A special policy will be developed for Climate change and mitigation projects
What will decrease in price?
KEY FEATURES OF UNION BUDGET 2024: The budget also announced a reduction in customs duty on certain drugs and medical equipment.
Customs duty on chargers will also be reduced by 15 percent
It has been announced that customs duty on gold and silver will be reduced by six percent.
25 important minerals are exempted from customs duty.
What will increase in price?
KEY FEATURES OF UNION BUDGET 2024: Customs duty on ammonium nitrate increased by 10 percent
Customs duty on non-biodegradable plastics increased by 25%.
Tax on investments in stock market less than one year has been increased from 15 to 20 percent.
The tax on investment in the stock market for more than one year has been increased from 10 to 12.5 percent.
Customs duty on certain types of telecommunication equipment has been increased from 10 to 15 percent.
Employment programs
KEY FEATURES OF UNION BUDGET 2024: A thousand ITIs will be created in the next 5 years
India's leading companies will provide skill training to one crore youth in five years.
Training will be provided for 12 months through Prime Minister Internship Scheme. During this scheme, monthly incentive of Rs. 5000 will be given.
A new policy will be formulated to provide skill training and employment to 4 crore youth.
2 lakh crore will be earmarked for job and skill development training.
The incentive will be paid directly into the bank account of the first-time entrant.
Scheme to provide incentives to companies that generate more employment.
Educational programs
KEY FEATURES OF UNION BUDGET 2024: The Union Budget 2024-25 has earmarked Rs 1.48 lakh crore for education, employment and skill development programs in the country.
The government will provide financial support for higher education in domestic educational institutes for loans up to Rs.10 lakh. This assistance will be provided through e-vouchers, which will be directly disbursed to one lakh students annually and will be provided with an interest subsidy of 3 per cent on the loan amount.
Apart from this, the Finance Minister outlined several schemes for the skill development sector.
Schemes notified to farmers
KEY FEATURES OF UNION BUDGET 2024: 1.52 crore allocation for development in agriculture and allied sectors
A digital survey of kharif crops will be conducted in 400 districts across the country.
Kishan Credit Card will be provided to farmers in five states
Financial assistance will be provided to establish infrastructure of shrimp breeding centers
109 varieties of 32 agricultural crops will be released for high yield and climate change tolerance. This will improve the agriculture and horticulture sector.
Certification training will be provided to 1 crore farmers across the country on organic farming
Tax on Jewellery
KEY FEATURES OF UNION BUDGET 2024: Customs duty on gold and silver will be reduced to 6% and on platinum to 6.5%.
Projects for Bihar, Andhra Pradesh
KEY FEATURES OF UNION BUDGET 2024: The central government will develop the 'Purvodaya' scheme for the development of all sectors in the states of Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh.
26 thousand crore rupees allocation for the development of Bihar state
Apart from the two expressways already under construction, 3 more expressways will be constructed through Bihar.
A new bridge will be constructed over the river Ganga in Buxar district. It was announced in the budget speech that it will be made a two-lane road.
Funding will be provided for development of Nalanda Tourism Centre.
Vishnupad temple and Mahabodhi temple at Gaya will also be upgraded along with Kasi Vishwanath temple. Along with this, the Jain temple at Rajgir will also be upgraded.
Adequate schemes will be brought to deal with the damage caused by floods and crop damage in Bihar. Action will be taken especially with regard to agriculture affected by floods in Kosi river.