
1st JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த.முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தது
- 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
- அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அக்குழு இன்று முதல்வர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் 1860 (ஐ.பி.சி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (சி.ஆா்.பி.சி), இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 (ஐ.இ.சி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- முக்கிய மாற்றங்களில் பாரதிய நியாய சன்ஹிதாவில் (பி.என்.எஸ்) புதிய குற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பது (10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை), இனம், சாதி அல்லது சமூகம், பாலினம் (ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை) அடிப்படையில் 'கும்பலாக தாக்குதல்', கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அதன் வரம்பிற்குள் கொண்டு வருவதல் (3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை) உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
- பாரதீய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பி.என்.எஸ்.எஸ்) கீழ், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு கீழ் தற்போதைய 15-நாள் வரம்பிலிருந்து 90 நாட்கள் வரை போலீஸ் காவலில் தடுப்புக்காவலை சட்டம் நீட்டிக்கிறது.
- சாதாரண தண்டனைக் குற்றங்களுக்காக இந்த நீண்ட கால விசாரணைக் காவலில் இருப்பது தனிமனித சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் தொடர்ந்து செயல்படும்.
- அதே வேளையில், வர்த்தமானி அறிவிப்பு வெளியான பிறகு செய்யப்படும் குற்றங்களுக்கு புதிய சன்ஹிதாக்கள் பொருந்தும்.