21st JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாலாற்றங்கரையில் 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முத்திரை நாணயம் கண்டெடுப்பு
- செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாற்றங்கரையில், பழமையான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இவை, அக்கரை பகுதியில் பரவியிருந்த பழமையான ஆற்றங்கரை நாகரிகத்துக்கு சான்றாக உள்ளன.
- சமீபத்தில், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியின் வரலாற்று துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க செயலருமான மதுரைவீரன், பாலாற்றங்கரையில் ஆய்வு செய்தார். அப்போது, கி.மு., 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முத்திரை நாணயத்தை கண்டெடுத்துள்ளார்.
- இது, 15 - 12 மி.மீ., அளவில், நீள்சதுர வடிவில், 3 மி.மீ., தடிமனுடன் உள்ளது. இந்த வெள்ளி நாணயத்தில், அம்பின் முனை, சூரியன், மலைமுகடு, டாவரின் ஆகிய வடிவ முத்திரைகள் உள்ளன.
- தமிழகத்தை பல்லவர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்துக்கு அருகில், இந்த நாணயம் கிடைத்துள்ளதால், தமிழர்கள் கங்கை சமவெளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை அறிய முடிகிறது.
- இது குறித்து, தமிழ் இலக்கியங்களான பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றிலும் நிறைய பதிவுகள் உள்ளன. அதேபோல, முத்திரை நாணயங்களை உருவாக்கும் சுடுமண் அச்சு ஒன்றும் இங்கு கிடைத்தது. மேலும், சோழர்களில் சிறந்தவனான ராஜராஜனின் வட்ட வடிவ செப்பு நாணயங்களும் கிடைத்தன.
- இவற்றில், ஒரு பக்கம் நின்ற நிலையிலும், மறுபக்கம் அமர்ந்த நிலையிலும் மனிதன் உள்ளான். நாகரியில் ராஜராஜன் என்ற பெயர் உள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.
- நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் தியான பூமியான ஜம்மு காஷ்மீரில் இன்று கூடியிருப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
- இந்த ஆண்டு கருப்பொருள் 'தனிமனித மற்றும் சமூகத்திற்கான யோகா' தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் இரட்டைப் பங்கை எடுத்துக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் பங்கேற்பதையும், யோகா பரவுவதையும் இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கும்.
- வெளியுறவுத் துறை அமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற ஜெய்சங்கர், அரசு முறை பயணமாக நேற்று இலங்கை சென்றார்.
- தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோரின் உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை அவர் சந்தித்தார்.
- அதிபர் மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
- பின்னர், இந்தியாவின் நிதி உதவியுடன் இந்திய மதிப்பில், 50 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை ஜெய்சங்கர் மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்தனர்.
- கொழும்புவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலே, அருகம்பே, மட்டக்களப்பு, திரிகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் இந்த ஒருங்கிணைப்பு மையத்தில் அடங்கும்.
- மேலும், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ், கட்டப்பட்ட 154 வீடுகளை பயனாளிகளிடம், அதிபர் முன்னிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்தார்.