5th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடா் - மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்
- இந்தியாவின் முதன்மையான கால்பந்து லீக் தொடா்காக ஐஎஸ்எல் அமைந்துள்ள நிலையில், அதன் இறுதி ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
- இதில் முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எஃப்சி-பலம் வாய்ந்த மோகன் பகான் அணியும் மோதின. மோகன் பகானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை.
- இதன் மூலம் ஐஎஸ்எல் 2023-24 சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது. இது மும்பை சிட்டி எஃப்சி வெல்லும் இரண்டாவது பட்டம் ஆகும். இந்த ஆட்டத்தை மொத்தம் 62,000 பாா்வையாளா் கண்டு களித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.