3rd MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஏப்ரலில் இறங்குமுகம் கண்ட உற்பத்தித் துறை
- உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் 4 மாதங்கள் காணாத அதிகபட்சமாக 57.2-ஐத் தொட்டது. பின்னா் அந்த ஆண்டின் மே மாதத்தில் அது 31 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக 58.7-ஆக அதிகரித்தது.
- அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 57.8-ஆகவும், ஜூலையில் 57.7-ஆகவும் சரிந்த அது, அடுத்த ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்தது. பின்னா் செப்டம்பரில் பிஎம்ஐ மீண்டும் 57.5-ஆக சரிந்தது.
- அக்டோபரில் இன்னும் சரிந்து 55.5-ஆக இருந்தது. அது, முந்தைய 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.
- இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது.
- பின்னா் ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது.
- இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகச் சரிந்தது. இருந்தாலும், இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 2-ஆவது அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.
- இதன் மூலம், தொடா்ந்து 34-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது. மேலும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழல் நிலவியது.
- இதன் காரணமாக உற்பத்தித் துறை கடந்த ஏப்ரலில் மூன்றரை ஆண்டுகள் காணாத 2-ஆவது பெரிய வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தலைமையிலான ஏழு பேர் கொண்ட இந்திய தூதுக்குழுவுடன், நைஜீரியா கூட்டாட்சி குடியரசுக்கான இந்திய ஹை கமிஷனர் திரு ஜி பாலசுப்பிரமணியன், வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி.நாயர் ஆகியோர் 29.04.2024 முதல் 30.04.2024 வரை அபுஜாவில் தங்கள் நைஜீரிய சகாக்களுடன் கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தை நடத்தினர்.
- நைஜீரியாவின் மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர், தூதர் நூரா அபா ரிமி, வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்கினர்.
- இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக்கத்திற்கான பரந்த பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்தியாவின் அதிகாரபூர்வ குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
- இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில், இருதரப்பு வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அனைத்து பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டை எளிதாக்கவும் இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.
- மின்சாரம், நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சார இயந்திரங்கள், மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய அதிகாரபூர்வ தூதுக்குழுவுடன் சிஐஐ தலைமையிலான வர்த்தக தூதுக்குழுவும் சென்றது.
- இந்தியா-நைஜீரியா கூட்டு வர்த்தகக் கூட்டமைப்பின் 2-வது அமர்வின் விவாதங்கள் சுமூகமாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் அமைந்திருந்தன.
- பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளர், ஏர் மார்ஷல் டோனி எர்மவான் தஃபாண்டோ, எம்.டி.எஸ் ஆகியோர் 2024 மே 03 அன்று புதுதில்லியில் இந்தியா-இந்தோனேசியா இடையேயான 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
- இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.
- 2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 156.1 ஆக இருந்தது, இது 2023, மார்ச் மாதத்தின் அளவுடன் ஒப்பிடும்போது 1.2% அதிகமாகும். முழு நிதியாண்டு 2023-24-க்கான குறியீடு நிதியாண்டு 2022-23 ஐ விட 7.5% அதிகரித்துள்ளது.
- முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 2024, மார்ச் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. சில எரிபொருள் அல்லாத கனிமங்கள் தாமிரம், தங்கம், மாங்கனீசு தாது, வைரம், கிராஃபைட், கைனைட், சிலிமனைட், சுண்ணாம்புக் கல், மேக்னசைட் போன்றவை இதில் அடங்கும்.
- இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை சேர்ந்து மொத்த எம்.சி.டி.ஆர் கனிம உற்பத்தியில் சுமார் 80% பங்களிக்கின்றன. தற்காலிக புள்ளி விவரங்களின்படி, நாட்டில் இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் அதிக வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
- 2023-24-ம் நிதியாண்டில் 277 மில்லியன் மெட்ரிக் டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 258 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி என்ற சாதனையை 7.4% வளர்ச்சியுடன் முறியடித்துள்ளது.
- இதேபோன்ற போக்கைக் காட்டும் வகையில், சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் அடையப்பட்ட 406.5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி சாதனையையும் விஞ்சியுள்ளது. இது நிதியாண்டு 2023-24-ல் 10.7% அதிகரித்து 450 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
- இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2023-24-ம் நிதியாண்டில் முதன்மை அலுமினிய உலோகத்தின் உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டின் உற்பத்தி சாதனையை முறியடித்துள்ளது.
- முதன்மை அலுமினிய உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 40.73 லட்சம் டன்னிலிருந்து 2023-24-ம் நிதியாண்டில் 41.59 லட்சம் டன்னாக 2.1% வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.
- இந்தியா உலகின் 2வது பெரிய அலுமினியம் உற்பத்தியாளராகவும், 3-வது பெரிய சுண்ணாம்பு உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது.
- 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் ஆரோக்கியமான வளர்ச்சி, எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற பயனர் தொழில்களில் வலுவான தேவை நிலைமைகளை பிரதிபலிக்கிறது.
- அலுமினியத்தின் உயர் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் வலுவான பொருளாதார நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றன.