23rd MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு - அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே அறிவிப்பு
- பாலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நாட்டை, அரபு நாடுகள் உடனடியாக அங்கீகரித்தன. பல்வேறு காலகட்டங்களில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை ஏற்றுக் கொண்டன.
- ஐநா உறுப்பு நாடுகளான 193 நாடுகளில் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
- இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய 3 நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்தன.
- வரும் 28ம் தேதி முறைப்படியான அங்கீகாரம் வழங்கப் போவதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், நார்வே பிரதமர் ஜோனஸ் கார், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டனர்.
- முதல் முறையாக ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் அமைதியை மீட்கவும், காசா போரை முடிவுக்கு கொண்டு வரவும் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக 3 நாடுகளும் தெரிவித்துள்ளன.
- சமீபத்தில் ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக நியமிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- இந்த முடிவு தீவிரவாதத்திற்கு தரப்பட்ட பரிசு என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், 3 நாடுகளில் இருந்தும் தனது தூதரை உடனடியாக திரும்பப் பெற்றது.
- ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிநடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
- இதன் மூலம் அவர் தனது சொந்த ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.21 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.
- தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்தியாவின் தரம்பீர் 33.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
- நேற்று முன்தினம் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் மகளிருக்கான கிளப் த்ரோவில் ஏக்தாபியான் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளது. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
- கடந்த ஆண்டு பாரிஸ்தொடரில் அதிக பட்சமாக 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 10 பதக்கங்கள் கைப்பற்றி இருந்தது.