20th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தளத்தின் பயிலரங்கு
- ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் தளம் நாட்டின் சரக்கு போக்குவரத்துத் துறையை முன்னேற்றுவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
- தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமையில் சிறப்பு பயிலரங்கம் ஒன்று இன்று நடைபெற்றது.
- புதுதில்லியில் உள்ள வனிஜ்யா பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு தொழில் சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டன.
- முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி நியமித்தார். அடுத்த 50 நாட்களுக்கு முகமது மொக்பர் ஈரானின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.
- புதிய ஜனாதிபதி தேர்வாகும் வரை சட்டத்துறை, நீதித்துறை தலைவர்கள் மொக்பருக்கு ஒத்துழைப்பு தர கோரிக்கை வைத்துள்ளார். ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.
- இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
- அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.