19th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் - சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி சாம்பியன்
- தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீனாவின் ஷென் போ யங், லியு யி ஜோடியை எதிர்த்து விளையாடினர்.
- இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-15, 21-15 என்ற செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். முதல் ஆட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து அவர்கள் முன்னேற்றம் கண்டனர்.
- அதன் பின்னர் இரண்டாவது கேமில் ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றனர்.
- பெண்களுக்கான 52 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயேவா மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு உலக சாம்பியன்' நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாக் ஷி 4-1 என உஸ்பெகிஸ்தானின் ரஹ்மோனோவா சைதாஹோனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
- பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அனாமிகா (50 கிலோ), மணிஷா (60 கிலோ) தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
- ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் (67 கிலோ), விஷால் (86), கவுரவ் சவுகான் (+92) தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினர்.
- இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெற்றி, 8 வெண்கலம் என அதிகபட்சமாக 12 பதக்கங்கள் கிடைத்தன. கடந்த முறை 5 பதக்கம் கிடைத்திருந்தது.