Type Here to Get Search Results !

12th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வனங்களுக்கான ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 19 வது அமர்வு
  • 2024 மே 6 முதல் 10 வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வனங்களுக்கான மன்றத்தின் 19 வது அமர்வில் இந்தியா பங்கேற்றது. 
  • இந்த அமர்வின் போது, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்தியா எடுத்துரைத்தது. 
  • இது கடந்த பதினைந்து ஆண்டுகளில் வனப்பகுதியை தொடர்ந்து அதிகரிக்க வழிவகுத்தது. உலகளவில், 2010 மற்றும் 2020 க்கு இடையில், சராசரி ஆண்டு வனப்பகுதியில் நிகர ஆதாயத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கட்டமைப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களுக்கு விரிவுபடுத்தியதன் மூலம், பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு நாடு அளித்து வரும் உயர் முன்னுரிமையை இந்தியா பகிர்ந்து கொண்டது. 
  • புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகள் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 30 ஆண்டுகளைக் குறிக்கும் சமீபத்திய கொண்டாட்டங்கள், உயிரினப் பாதுகாப்பு மற்றும் வாழ்விட பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 
  • கூட்டு சர்வதேச முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு புலி இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு முக்கியமான படியாக சர்வதேச பெரும் பூனை கூட்டணியை உருவாக்கியதையும் இந்தியா எடுத்துரைத்தது.
  • மரம் நடுதல் மற்றும் சீரழிந்த வன நிலங்களை மீட்டெடுப்பதை மேற்கொள்ள நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'பசுமை கடன் திட்டத்தை' அறிமுகப்படுத்தியதையும் இந்தியா பகிர்ந்து கொண்டது. இது காலநிலை நடவடிக்கை முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் , டேராடூனில் ஐநா வன அமைப்பின் கீழ் இந்த முன்முயற்சியை இந்தியா மேற்கொண்டது. இதில் 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
  • காட்டுத் தீ மேலாண்மை மற்றும் வன சான்றிதழ் குறித்து விவாதங்கள் அந்தக் கூட்டத்தில் நடைபெற்றன. இந்த முயற்சியின் பரிந்துரைகளை இந்தியா இப்போதைய கூட்டத்தில் முன்வைத்தது.
  • நியூயார்க்கில் நடைபெற்ற 19-வது அமர்வில் ஒருங்கிணைந்த கிராமப்புற தீ மேலாண்மை முகமை, கொரியா வன சேவை மற்றும் சர்வதேச வெப்பமண்டல மர அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து 'கூட்டு ஆளுகை மூலம் நிலப்பரப்பு ஒருங்கிணைந்த தீ மேலாண்மைக்கான கொள்கைகள் மற்றும் உத்திகள்' என்ற பக்க நிகழ்வும் நடைபெற்றது.
  • காடழிப்பு மற்றும் வன சீரழிவை நிறுத்துவதற்கும், காடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உத்திசார் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் உலகளாவிய வன இலக்குகளை அடைவது உட்பட நில சீரழிவைத் தடுப்பதற்கான அவசர மற்றும் துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • இந்திய தூதுக்குழுவிற்கு வனத்துறை தலைமை இயக்குநரும், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளருமான திரு. ஜிதேந்திர குமார் தலைமை தாங்கினார்.
ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக உடன்பாட்டு கூட்டுக் குழுவின் 4வது கூட்டம்
  • ஆசியான்-இந்தியா சரக்கு ஒப்பந்தத்தில் வர்த்தகம் பற்றிய  மறுஆய்வுக்கான 4 வது கூட்டுக் குழுக் கூட்டம் 2024 மே 7-9 தேதிகளில் மலேசியாவின் புத்ராஜெயாவில் நடைபெற்றது. 
  • இதில் இந்தியாவின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் (வர்த்தகம்) திருமதி மஸ்துரா அகமது முஸ்தபா ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இந்தியா மற்றும் 10 ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.
  • வர்த்தக ஒப்பந்தங்களை  மறுபரிசீலனை செய்வதற்கான விவாதங்கள், பிராந்தியம் முழுவதும் உள்ள வணிகங்களுக்கு அதிக வர்த்தக வசதி  அளிக்கும் கூட்டம்  மே 2023 இல் தொடங்கியது. ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் கூட்டுக்குழு இதுவரை நான்கு முறை கூடியுள்ளது. 
  • கூட்டுக் குழு தனது முதல் இரண்டு கூட்டங்களில் மறுஆய்வு பேச்சுவார்த்தைகளுக்கான அதன் குறிப்பு விதிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தை கட்டமைப்பை இறுதி செய்தது. 
  • புதுதில்லியில் 2024 பிப்ரவரி 18-19 தேதிகளில் நடைபெற்ற அதன் மூன்றாவது கூட்டத்திலிருந்து ஏஐடிஜிஏவை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
  • மீளாய்வின் போது ஒப்பந்தத்தின் பல்வேறு கொள்கைப் பகுதிகளைக் கையாள்வதற்காக மொத்தம் 8 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, 
  • அவற்றில் 5 உப குழுக்கள் அவற்றின் விவாதங்களைத் தொடங்கியுள்ளன. அனைத்து 5 துணைக்குழுக்களும் தங்கள் விவாதங்களின் முடிவுகளை 4வது ஏ.ஐ.டி.ஐ.ஜி.ஏ கூட்டுக் குழுவுக்கு அறிக்கை அளித்தன. 
  • மலேசியாவின் புத்ராஜெயாவில் 4வது ஏஐடிஐஜிஏ கூட்டுக் குழுவுடன் நேரடியாக துணைக்குழுக்கள்  கூடின. சுகாதார மற்றும் தாவர சுகாதாரத்திற்கான துணைக்குழு முன்னதாக 3மே 2024 அன்று கூடியது. கூட்டுக்குழு உப குழுக்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கியது.
  • இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் 11 சதவீத பங்களிப்புடன் ஆசியான் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்குதாரராக உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 122.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 
  • ஏ.ஐ.டி.ஜி.ஏ.வின் மேம்பாடு இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும். இரு தரப்பினரும் அடுத்ததாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2024 ஜூலை 29-31 வரை 5வது கூட்டுக் குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel