SSC CHSL வேலைவாய்ப்பு
SSC CHSL RECRUITMENT 2024
SSC CHSL நிறுவனத்தில் Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Lower Divisional Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator - 3712
- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)/DEO கிரேடு ‘A’ க்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது அதற்கு சமமான பாடமாக கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பிற துறைகள் அல்லது அமைச்சகங்களில் உள்ள DEO/DEO கிரேடு ‘A’ மற்றும் அனைத்து LDC/JSA பதவிகளுக்கும், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆகஸ்ட் 1, 2024 கட்-ஆஃப் தேதி அல்லது அதற்கு முன் அத்தியாவசியத் தகுதிகளைப் பெற்றிருந்தால், தங்களின் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
- Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
- Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
- ஆகஸ்ட் 1, 2024 நிலவரப்படி, விண்ணப்பதாரர் 18-27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும், அதாவது ஆகஸ்ட் 2, 1997 முதல் ஆகஸ்ட் 1, 2006 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (08.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.