4th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது
- எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் ஐபோன் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதனை புதுதில்லியில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா தொடங்கிவைத்தார்.
- மத்திய அரசு சுகாதாரத் திட்ட பயனாளிகளுக்கான மின்னணு சுகாதார பதிவுகள், தகவல்கள் அணுகலை மேம்படுத்தி இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயலி இமாச்சலப் பிரதேச தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய தகவல் மைய சுகாதார தொழில்நுட்ப குழுக்களால் உருவாக்கப்பட்டது.
- இது மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு தகவல் மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அம்சங்களை வழங்கும் வசதியான மொபைல் செயலியாகும். இந்த செயலி தற்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் தளங்களிலும் கிடைக்கும்.
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து 2024 ஏப்ரல் 03 இரவு 7.00 மணியளவில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது.
- இந்த சோதனை நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் தளபதி, அணு ஆயுதப் பிரிவுத் தலைவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.