30th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு மார்ச் 2024
- எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு (ஐசிஐ) மார்ச் 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச்சில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி மார்ச் 2024-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
- சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது.
- எட்டு முக்கிய தொழில்கள் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) சேர்க்கப்பட்ட பொருட்களின் எடையில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
- 2023 டிசம்பருக்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ஐசிஐ-ன் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
- சிமெண்ட் உற்பத்தி, இந்தக் காலக்கட்டத்தில் 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.0 சதவீதமும், மின்சார உற்பத்தி 8.0 சதவீதமும் அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 1.3 சதவீதம் குறைந்துள்ளது.
- இயற்கை எரிவாயு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்துள்ளது. எஃகு உற்பத்தி 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2024-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான தரவுகள் தற்காலிகமானவை. ஆதார நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின்படி முக்கிய தொழிற்சாலைகளின் குறியீட்டு எண்கள் திருத்தியமைக்கப்படுகின்றன அல்லது இறுதி செய்யப்படுகின்றன.
- 2024, ஏப்ரல், மாதத்திற்கான குறியீடு 2024 மே மாதம் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.
- இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஆர். ஹரி குமார் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி, கடற்படைத் தளபதியாக கடந்த 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக இன்று (ஏப்.30) பொறுப்பேற்றுக் கொண்டார் தினேஷ் குமார் திரிபாதி.
- ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கவச் ஆகிய போர்க் கப்பல்களை தலைமையேற்று திறம்பட வழிநடத்தியவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி.
- இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் மேம்பாட்டு அமைப்பான தேசியப் புனல் மின் கழகம், மிதக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்ப வழங்குநராக செயல்படும் நார்வே நிறுவனமான ஓஷன் சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சூரிய மின்தகடுகள் அடிப்படையில் ஓஷன் சன் நிறுவனத்தின் மிதக்கும் சூரிய சக்தி தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்யும் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளை தேசியப் புனல் மின் கழகமும், ஓஷன் சன் நிறுவனமும் ஆராயும்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசியப் புனல் மின் கழக நிர்வாக இயக்குநர் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன்), திரு வி.ஆர்.ஸ்ரீவஸ்தவா, ஓஷன் சன் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி திரு கிறிஸ்டியன் டோர்வோல்ட் ஆகியோர் 2024 ஏப்ரல் 29 அன்று மெய்நிகர் முறையில் கையெழுத்திட்டனர்.