29th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தொழிலகங்களின் கார்பன் நீக்கத்திற்கு இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள், இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் அதிக அளவில் கரியமிலவாயுவை சேமித்து வைப்பதற்கான சாத்தியம் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
- ‘கரியமிலவாயுவை நீக்குதல்’ என்றழைக்கப்படும் இந்த செயல்முறை தொழிற்சாலைகளின் கார்பன் நீக்கத்திற்கு உதவும். இதன் மூலம் பசுமைக் குடில் வாயு சேமிப்பு இடமாக இக்கடல்கள் செயல்படும்.
- கடலில் 500 மீட்டர் ஆழத்திற்கு அடியில் திட ஹைட்ரேட் வடிவில் கரியமிலவாயுவை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- திரவ கரியமிலவாயுவாக சேமித்து வைப்பதால் தொழிலக வெளியேற்றங்களில் கார்பன் நீக்கம் செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இதன் மூலம், கடல் சூழலியலுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காமல் கார்பனைக் கட்டுப்படுத்த கடல்களின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும்.
- மிகப் பெரிய அளவில் கரியமிலவாயு சேமிப்பகமாக இக்கடல்கள் இருப்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற முக்கிய கண்டுபிடிப்பாகும்.
- தேசிய கார்பன் கட்டுப்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்ற இலக்குகளை இந்தியா அடைவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் வகையில் அமைந்துள்ளது. சேமிக்கப்படும் கரியமிலவாயு மூலம், ‘வாயு நீரேற்றி’ எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பனி போன்ற பொருளை உருவாக்க முடியும்.
- சென்னை ஐஐடியின் ரசாயனப் பொறியியல் துறை பேராசிரியர் ஜிதேந்திர சங்வாய், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர் திரு யோகேந்திர குமார் மிஸ்ரா ஆகியோரின் தலைமையில் இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
- சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியானது ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடியது.
- இதில் இந்திய அணி 5-1என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக்கோப்பை தொடரில் ரீகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி 14 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 2010-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில் தங்கம் வென்றிருந்தது.
- கலப்பு அணிகள் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், தீரஜ்பொம்மதேவாரா ஜோடி 6-0 என்றகணக்கில் மெக்சிகோவின் அல்ஜான்ட்ரா வலென்சியா, மத்தியாஸ்கிராண்டே ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
- மகளிருக்கான தனிநபர் ரீகர்வ்பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் லிம் சிஹ்யோனிடம் 0-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.
- முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சி மாநாடு புதுதில்லியில் இன்று (29.4.2024) தொடங்கியது. முக்கியமான கனிம வளம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் புதுமையை ஊக்குவிப்பதற்காக இந்த 2 நாள் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
- சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் தொடக்க விழாவிற்கு தலைமை வகித்தார்.
- இந்த உச்சிமாநாட்டில் நிலப்பரப்பு மற்றும் கடல் சூழல்களிலிருந்து பெறப்படும் பல்வேறு வகையான கனிமங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்னன.
- உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகம் மற்றும் சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ) கையெழுத்தானது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சுரங்க அமைச்சகம், சக்தி எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவற்றுக்கு இடையே கூட்டுச் செயல்பாட்டுக்கு வழி வகுக்கிறது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி ஆகியவை தொடர்பாக ஆய்வு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.