Type Here to Get Search Results !

17th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு டிஆர்டிஓவால் அமைக்கப்பட்ட முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமான ஸ்பேஸ் கேரளாவில் தொடங்கப்பட்டது
  • கேரளாவின் இடுக்கியில் உள்ள குளமாவு நீரடி ஒலி ஆராய்ச்சி அமைப்பில் அதிநவீன நீர்மூழ்கித் தளத்தை (ஸ்பேஸ்) பாதுகாப்புத் துறை செயலாளரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் 2024, ஏப்ரல் 17 அன்று திறந்து வைத்தார். 
  • டி.ஆர்.டி.ஓ.வின் கடற்படை இயற்பியல் மற்றும் கடலியல் ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட ஸ்பேஸ், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கடற்படை தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லை ஸ்பேஸ் குறிக்கிறது. இது, நீரின் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு தளம், வின்ச் அமைப்புகளைப் பயன்படுத்தி 100 மீட்டர் வரை எந்த ஆழத்திற்கும் இறக்கக்கூடிய நீர்மூழ்கித் தளம் என இரண்டு தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் செயல்பாடுகள் முடிந்ததும், நீர்மூழ்கித் தளத்தை மேலே தூக்கி மிதக்கும் தளத்துடன் இணைக்கலாம்.
ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ
  • விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் புதிய ஆராய்ச்சிகளையும் நுட்பங்களையும் தொடா்ந்து இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பத்திலான கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது.
  • ராக்கெட்டின் உந்துவிசைக்காக எரிபொருள்களில் வேதி மாற்றத்தை உருவாக்கி அதை விண்ணில் செலுத்துவதற்கு நாசில் எனப்படும் கட்டமைப்பு பெரிதும் பயன்படுகிறது. 
  • பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் நான்காம் நிலையில் (பிஎஸ் 4) தற்போது கொலம்பியம் அலாய் மூலக்கூறால் ஆன நாசில்களுடன் கூடிய இரு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
  • அதற்கு மாற்றாக மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில் காா்பன்-காா்பன் மூலக்கூறு நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ராக்கெட்டின் உந்துவிசை திறன், எரிசக்தி ஆற்றல் திறன் உள்ளிட்டவை மேம்படுவதுடன் நாசில் கட்டமைப்பின் எடை ஏறத்தாழ 67 சதவீதம் குறையும். 
  • இதன் வாயிலாக, தற்போது உள்ள எடையைக் காட்டிலும் கூடுதலாக 15 கிலோ கொண்ட ஆய்வுக் கருவிகளை பிஎஸ்-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.
  • இதற்கான பரிசோதனைகள் கடந்த மாா்ச் 19, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டன. 
  • அப்போது அந்த கட்டமைப்பானது திட்டமிட்ட இலக்குகளை அடைந்து, அதன் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel